320
அப்பாத்துரையம் - 16
பாண்டியன் எதிர்க்க முனைந்தது அவ்வல்லரசனையே. ஆனால், அப்போரில் கண்ட கோபாலனுக்கு வடதிசை வல்லரசர் பலரும் உதவியாயிருந்தனர்.
முடுகூர், நெல்லூர் மாவட்டத்தில் உள்ளது. மற்ற வடதிசை அரசர் உதவியை எதிர்பார்த்தே கண்ட கோபாலன் தன் ஆட்சிப் பகுதியில் வட எல்லையிலுள்ள அவ்விடம் வரை பின் வாங்கிக் கொண்டு சென்றிருக்க வேண்டும். ஏனெனில்,அப்போரில் காகதீய மரபின் புகழ்மிக்க பேரரசனான கணபதியும் வேறு பல தெலுங்கரசரும் ஆரிய அரசரும் கண்ட கோபாலனுடன் சேர்ந்து போராடினார்கள்.
இப்போரில் பாண்டியன் தென்னகமே அதிரும்படியான பெரு வெற்றியடைந்தான். போரில் ஈடுபட்டிருந்த ஒரு வாண அரசனை அவன் நாடு விட்டே துரத்தினான். மற்ற டதிசையரசர்கள் பலரையும் பணியவைத்து, நெல்லூரிலே வீரமாமுடிவிழா (வீரா பிஷேகம்) நிகழ்த்தினான்.
சடையவர்மன் சுந்தர பாண்டியன் போர்களில் வீர பாண்டியன், விக்கிரம பாண்டியன், சடையவர்மன், குலசேகர பாண்டியன் II ஆகிய பிற பாண்டியத் துணையரசர் அவனுக்கு உற்ற துணையா யிருந்தனர் என்று அறிகிறோம்.
கர்நூல், திராட்சாராமம் வரை பாண்டியப் பேரரசெல்லை இப்போரினால் விரிவுற்றது. 'எம் மண்டலமும் கொண்டருளிய சுந்தர பாண்டிய தேவன்' என்ற விருதுப் பெயரை இப்பாண்டியன் மேற் கொண்டான்.
பாண்டியர் ஈழப்படையெழுச்சி : காரிக்களப் போர் :
1284
சடையவர்மன் சுந்தர பாண்டியனுக்குப் பின் பேரரசு ஆண்டவன் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஐ (1268-1311) பிற்காலப் பாண்டியப் பேரரசருள் கடைசியானவன் இவனே. 'கோனேரின்மைக் கொண்டான்' ‘புவனேகவீரன்' என்ற விருதுப் பெயர்கள் இவன் பேரரசு மாண்புக்கு இசைந்தவையே. பாண்டி நாட்டுக்கு இச்சமயம் வருகை தந்த மேலை நாட்டு யாத்திரிகன் மார்க்கோ போலோ, இஸ்லாமிய வரலாற்றறிஞன் வசப்