உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

59

தெலுங்குக் கலிங்கம், வங்கம், பர்மா ஆகிய மூன்றுமே. இம் முக்கலிங்கப் பேரரசர் காலத்தில் தமிழர் கங்கை ஆரியர் போட்டி மறைந்தது. கங்கை ஆரியர், ஆந்திரர், தமிழர் ஒரே நாகரிகத்தின் அடிப்படையில் இணைந்து, பண்படா ஆரியரும் அயலாருமான சிந்து ஆரிய மன்னரை எதிர்க்கத் தொடங்கினர். இதுவே சேரன் செங்குட்டுவன் காலம் (கி.பி.150-200) ஆகும்.

எனவே மூவேந்தர் வடதிசைப் படையெடுப்புகள் நடந்த காலம் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னிக்கும் (கி.மு.3- ஆம் நூற்றாண்டு) செங்குட்டுவனுக்கும் (கி.பி.150) இடைப்பட்ட காலமாய் இருத்தல் வேண்டும். இக்காலத்திலே மூவேந்தர் வடதிசைக் கெதிராக நீண்ட நாள் ஒன்றுபட்டிருந்த செய்தியைக் கலிங்கப் பேரரசன் காரவேலன் கல்வெட்டுகள் குறிக்கின்றன.

கலிங்கப் பேரரசன் காரவேலன்

படையெடுப்பும் தோல்வியும்

காரவேலன் கலிங்கப் பேரரசனாக ஆண்ட காலத்தை நம்மால் வரையறுக்க முடியவில்லை. ஆனால், அவன் ஆந்திரரை அடக்கி மகத நாட்டையும் வென்று புகழுச்சியடைந்திருந்த நாட்கள் கி.மு.163-க்கும் கி.மு.153-க்கும் இடைப்பட்ட பத்தாண்டு களே என்று அறிகிறோம். அவன் சமண சமயம் சார்ந்தவன். அசோகன் தன் ஆட்சிப் பரப்புடனே புத்த சமயமும் பரப்பியது போல, தன் ஆட்சிப் பரப்புடன் சமண சமயமும் பரப்பவேண்டும் என்ற எண்ணம் கொண்டவன் அவன். இக்காரணத்தாலேயே அவன் சமண சமய அசோகன் என்று குறிக்கப்படுகிறான். ஆந்திரப் பேரரசின் நீடித்த ஆட்சிக்கு வழி வகுத்துக் கொடுத்தவன் அவனே.

வடதிசையில் பரப்பிய ஆட்சியையும் சமயத்தையும் தென் திசையிலும் பரப்பி, அசோகனையும் தாண்டிப் புகழ்பெற்று விடவேண்டுமென்று காரவேலன் துடித்தான். ஆந்திரப் பேரரசு தற்காலிகமாக அவன் கீழ்ப்பட்டிருந்ததனால் அவன் பேரரசின் எல்லையும் அசோகன் பேரரச எல்லையைப் போலவே தமிழக எல்லையை அளாவியிருந்தது. மோரியர் என்று தலைப்படாத அளவில் அவன் தமிழகத்தில் இடம் கொள்ளப் பல போர்கள் ஆற்றினான். தமிழகத்தில் மூவேந்தர்கள், வேளிர்கள் ஆகிய