உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




60

அப்பாத்துரையம் - 16

யாவரும்செருப்பாழி கடந்த இளஞ்சேட் சென்னி கால முதல் வடதிசையை எதிர்த்து ஒரே கூட்டு முன்னணி அமைத்திருந்தனர். இதைச் சூழ்ச்சிகளால் உடைக்கவும் காரவேலன் அரும்பெரும் முயற்சிகள் செய்தான். இவற்றில் வெற்றி பெற்றதாகவும் அவன் தற்காலிகமாக எண்ணினான் என்று தோற்றுகிறது. ஏனென்றால் அவன் கல்வெட்டுகளில் ஒன்றில் அவன் இதுபற்றித் தற்பெருமை கொள்கிறான். 113 ஆண்டுகளாகத் தமிழகத்தில் நிலவிவந்துள்ள தமிழக அரசர்களின் கூட்டணியைச் சிதைத்து விட்டதாக அவன் அதில் குறிக்கிறான்.

கூட்டணி அமைந்த காலம் செருப்பாழி எறிந்த காலாமானால் அதன் ஆண்டு கி.மு. 276 அல்லது கி.மு. 266 ஆக இருக்க வேண்டும் என்னலாம்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்

வடஇமயத்தில் தமிழ்த்தடம் பொறித்த தமிழ் மூவேந்தருள் முதல்வன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனே என்று கூறலாம். னெனில் சேரருள்ளேயே செங்குட்டுவன் இமயம்வரை வென்றாலும், பிற தமிழ் வேந்தரும் இமயத்தில் தடம் பொறித்தாலும் அவனே 'இமயவரம்பன்' என்ற சிறப்புப் பெயருக்குப் போட்டியில்லாத உரிமையுடையவனாயிருக்கிறான் அவனை பத்துப்பாட்டில் பாடிய குமட்டூர்க் கண்ணனார்.

6

ஏம மாகிய சீர்கெழுவிழவின் நெடியோன் அன்ன நல்லிசை ஓடியா மைந்த!’

என்று நெடியோன் புகழை நினைவூட்டி, அதற்கு அவன் உரிய வனாகட்டும் என்று வாழ்த்துகிறார். நெடியோன் இமயம் வரை வென்ற பழம்புகழுடன், இமயத்தில் விற்பொறித்த நெடுஞ் சேரலாதனின் புதுப் புகழை இது ஒப்பிடுவதாகக் காண்கிறது. இது நெடுஞ்சேரலாதன் செயலன்று; அவன் முன்னோர்களின் புகழே என்று சிலர் கருத்துக் கொள்கின்றனர். ஆனால், முன்னோர் செயல் பின்னோருக்குக் கூறப்படுவது மரபானாலும், நெடுஞ்சேரலாதனே முன்னோனாக எங்கும் சிறப்பிக்கப்