72
அப்பாத்துரையம் - 16
ஏனெனில் இப்பெருங் கூட்டுவலு இப்போரில் முற்றிலும் முறிந்துவிட்ட தென்று அறிகிறோம். அரசரும் சிற்றரசரும் ஓடிய ஓட்டத்தில் அவர்கள் தத்தம் போர் முரசங்களை உடன் கொண்டு செல்லக்கூட நேரமில்லாது போயிற்று. அவற்றைக் களத்திலேயே கைவிட்டு ஓடினர்.
இப்போர் பற்றிச் சங்க காலப் பழம் பெரும் புலவர் பரணர் ஒரு கவிதை ஓவியம் தீட்டியுள்ளார்,
காய்சின மொய்ம்பில் பெரும் பெயர்க்கரிகால் ஆர்கலி நறவின் வெண்ணி வாயில்
சீர்கெழு மன்னர் மறலிய ஞாட்பில்
இமிழ் இசை முரசம் பொருகளத்து ஒழியப் பதினொரு வேளிரொடு வேந்தர் சாய
மொய்வலி அறுத்த ஞான்றைக்
தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே! (அகம் 246)
பாட்டின் இறுதியில் போர் வெற்றியின் பயனாக அழுந்தூரில் உண்டான ஆர்ப்பரிப் பாராவாரம் பெரிதென்ற குறிப்புத் தரப்பட்டுள்ளது. இது வெற்றி ஆரவாரம் என்பதிலும், அழுந்தூரே போர்க்களத்துக்கு அருகிலுள்ள நகரமோ அல்லது தலைநகரமோ ஆக வேண்டுமென்திலும் ஐயமில்லை. அழுந்தூரே தலைநகரென்றும் முதற்கரிகாலன் இச்சமயம் அழுந்தூர் வேள் அல்லது சிற்றரசன் நிலையில் இருந்தே வலிமை பெற்று வளரத் தொடங்கினான் என்றும் கருதப்படுகிறது. ஆனால், பிற அகப்பாடல்களில் அழுந்தூருடன், இடையாறு, கழார் ஆகிய ஊர்களும் அவனுடன் நெருங்கிய தொடர்புடை யனவாகக் குறிக்கப்படுகின்றன. எனவே செருப்பாழி வென்ற நெடுஞ்சேட் சென்னிக்குப்பின் பேரரசு பழையபடி சரியத் தொடங்கிற்றென்றும் அதைத்தடுக்கும் முயற்சியிலேயே, கரிகாலன் அழுந்தூரிலும், பிற வேளிர் தலையூர்களிலும் ஆதரவு பெற்றுப் போராடினான் என்று கொள்ள வேண்டும்.
செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னிக்கும் முதற் கரிகாலனுக்கும் உள்ள தொடர்பு மற்றொரு செய்தியாலும்