உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

73

வலியறுத்தப்படுகிறது. முந்தியவன் காலத்தில் சோழர் படைத்தலைவனாயிருந்தவன் அழுந்தூர் வேள் திதியனே. இதே அழுந்தூர் வேள் திதியன் என்ற பெயரே முதற்கரிகாலன் காலப் படைத்தலைவனாகவும் அவன் அறமன்றத் தலைவனாகவும் இருந்ததாகக் காணப்படுகிறது.புகழ்பெற்ற இரண்டாம் கரிகாலன் தாய் அழுந்தூர்வேள் மகள் என்பது காண அழுந்தூர் வேளுக்கும் சோழருக்கும் உள்ள மரபுத் தொடர்பு தெளிவாகும்.

இத் திதியன் படையில் பல கோசர் வீரராயிருந்தனர். அவர் களில் சிலர் அன்னி மிஞிலி என்ற நங்கையின் தந்தை கண்ணைக் கெடுத்து விட்டனர்.திதியன் அழுந்தூர் மன்றத்தில் முறைசெய்து அவ்வீரரைக் கொலைத்தண்டனைக்கு ஆளாக்கினான். இச்செய்தியும் பரணராலேயே (அகம் 196-ல்) குறிக்கப்பட்டுள்ளது.

வெண்ணிப்போர் II அல்லது வெண்ணிப்

பறந்தலைப்போர்

வெண்ணியில் நடைபெற்ற இரண்டாவது போரும் முதற் கரிகாலன் ஆற்றிய போரேயாகும். இப்போர் ஒரு வகையில் முன்னைய போரைத் தொடர்ந்து வந்த தமிழக முதன்மைப் பேரரசு நிலைக்கான போட்டிப் போராகவே தோற்றுகிறது. ஏனெனில் இதில் புகழ்மிக்க சேரனான பெருஞ்சேரலாதனே கரிகாலன் எதிரியாகப் போரிட்டான். இந்தப் பெருஞ் சேரலாதனைச் சிலர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் எனக் கொள்வதுண்டு. அதே சமயம் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கரிகாலன் சேரலாதன் மருமகனெனவும் சில மரபுகள் குறிக்கின்றன. ஆதலால் கரிகாலன் நெடுஞ்சேரலாதன் ஆகிய இரு பெயர்களிலும் உள்ள குழப்பம் இச்செய்திகளிடையே தெளிவு தரத்தக்கதாயில்லை. தலை தடுமாற வைப்பதாகவேயுள்ளது. ஏனெனில் பெருஞ்சேரலாதனும் நெடுஞ்சேரலாதனும் வேறாயிருத்தல் வேண்டும். நெடுஞ்சேரலாதன் தொடர்புடைய கரிகாலனும் முதற்கரிகாலனின் வேறாகல் வேண்டும்.

வெண்ணிப் பெருவெளியில் நடந்த இப்போர் மிகவும் கோரமான போராயிருந்திருக்க வேண்டும். ஏனெனில் இப் போரின் பயனாகச் சேரநாடே ஒளியிழந்ததென்று புறநானூற்றுப்