86
அப்பாத்துரையம் - 17
நகரத்தின் பக்கம் நின்று உதவுவதாகவும், குதிரைகளை எதிரிகளுக்கு விற்காது விசயநகரத்துக்கு மட்டுமே விற்பதாகவும் ஆவலூட்டினான். போர்ச்சுகீசியர் உதவியின் வலு அறிந்தும், குதிரைகளின் குத்தகை யின் மதிப்பறிந்தும் அவ்வுதவியையோ அதற்கு மாற்றீடான கோட்டை உரிமையையோ கிரஷ்ண தேவராயன் மறுக்கவில்லை அளிக்கவில்லை. ஆனால், பீஜப்பூரிடமிருந்து போர்ச்சுகீசியர் கோவாவைக் கைப்பற்றிய பின் 1510 -ல் குதிரை வாணிகத் தனியுரிமை மட்டுமன்றி வாணிகத் தனியுரிமையும் முற்றிலும் பெற்ற பின் இவ்வுரிமை அளிக்கப் பட்டது.
படைத்துறை சார்ந்த தமிழ், மேலை நாட்டு மரபு
வடதிசை நிலப் பண்ணையாட்சிமுறை யடிப்படையான அரசியல் சமுதாய நாகரிகம், பாளையக்காரர் முறை மூலம் விசய நகர ஆட்சியிலேயே பெருவளர்ச்சியுற்றது. ஆயினும் படைத் துறையில் நிலப்பண்ணையாட்சியின் கந்தறுகோலப்படை நடவடிக்கை முறையை ஒழித்து, சோழப் பெரும் பேரரசர் பாண்டியப் பேரரசர் காலத்திலிருந்த நிலவரப் படைப் பயிற்சி முறையை மேனாட்டவரைப் பார்த்துத் துளுவ மரபுப் பேரரசர் ம்மடி நரசிம்மனும் கிருஷ்ணதேவராயனும் பின்பற்றிப் படைக்குப் பயிற்சியளித்திருந்தனர். வீரத்தில் அவர்களில் குறையாத அரவீட்டு மரபு முதல்வன் இராமராயன் காலத்தில் இம்மரபு மீண்டும் வழக்கிழந்ததே விசய நகர வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.
தென் மைசூர் வெற்றி: 1510
-
12
தென் மைசூரில் உம்மத்தூர்த் தலைவனை முறியடிக் காமலே இம்மடி நரசிம்மன் மாள்வுற்றிருந்தான். வடதிசைப் போரில் இடை ஓய்வு ஏற்பட்டதே, கிருஷ்ணதேவராயன் தெற்கே திரும்பினான். உம்மத்தூர்த் தலைவன் கங்கராசன் இதற்குள் பெனுகொண்டாவையும் பெற்றுக் கைக் கொண்டிருந்தான். கிருஷ்ணதேவராயன் பெனு கொண்டாவையும் உம்மத்தூரையும் தலைநகராய் இருந்த சிவ சமுத்திரத்தையும் வென்றான். கங்கராயன் தோற்றோடிக் காவிரியில் விழுந்திறந்தான்.