உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 17.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 2

87

பழைய தலைநகரத்தைத் தரை மட்டமாக்கிபின் சீரங்க பட்ட ணத்தைத் தலை நகரமாகக் கொண்ட புது மாகாணமாக இப் பகுதி வகுக்கப்பட்டது. சாளுவ கோவிந்தராயன் அதன் ஆட்சித் தலை வனாகவும், பங்களூரிலுள்ள குடித்தலைவன் கெம்பகௌட அவன் உதவியாளனாகவும் அமர்த்தப்பட்டனர்.

கீழ்திசைக் கலிங்க வெற்றிகள் : கிருட்டிணையாற்றுப் போர் I: 1513

1516

கஜபதி அரசனான பிரதாபருத்ரன் ஆட்சி இச்சமயம் நெல்லூர் வரைக்கும் சென்றிருந்தது. அவன் வெற்றி எல்லை காஞ்சி தாண்டித் தஞ்சை வரை சென்றிருந்தது. கிருட்டிண தேவராயன் முன் இழந்த கீழ்ப் பகுதியை மீட்க முனைந்து 1513-ல் உதயகிரிக் கோட்டையை முற்றுகையிட்டான். ஒன்றரையாண்டு முற்றுகைக்குப் பின், மலை வழியாகப் புதுப் பாதைகள் வகுத்து அதைக் கைக்கொண்டான். பண்டைத் தமிழ் அரசர் மரபு பின்பற்றி அவ்வெற்றிச் சின்னமாக உதயகிரிக் கோட்டையிலிருந்த ஒரு பாலகிருஷ்ணன் வடிவத்தைக் கொண்டுவந்து விசயநகரத்தில் பதிப்பித்தான்.

உதயகிரி முற்றுகையைக் குலைக்கச் செய்த முயற்சிகள் யாவும் தகர்ந்தன. அத்துடன் உதயகிரியிலிருந்து அவன் படை களைத் துரத்திக் கொண்டே கிருஷ்ண தேவராயன் படைகள் கலிங்கப் பேரரசின் எல்லை முழுதும் வெற்றி ஊர்வலம் செல்வது போல் குதூகலத்துடன் சென்றன.

கஜபதிப் பேரரசின் தென்திசைப் பெருநகராக இப்போது கொண்ட வீடு விளங்கியிருந்தது. முதலில் விசயநகரப்படைத் தலைவன் சாளுவதிம்மரசனும், பின் கிருட்டிண தேவராயனும் அதன் முற்றுகையிலீடுபட்டனர். பல மாதங்கள் சென்றபின் விசயநகரப் படைகள் மதிலேறி உட்சென்று காவற்படைகளின் கட்டுக் குலைத்தன. கஜபதிப் பேரரசன் மனைவியும் ஒரு மகனும் உட்பட, ஒரிசாவின் (கலிங்கப்) பெருமக்கள் பலர் சிறைப்பட்டனர். சிறைப்பட்டவர்கள் நேரே விசய நகருக்கு அனுப்பப் பெற்றனர். கொண்ட வீட்டுப் பகுதியின் ஆட்சி சாளுவதிம்மனிடமே ஒப்படைக்கப்பட்டது.