தென்னாட்டுப் போர்க்களங்கள் - 2
(101
வாழ்விலும், விசய நகரப் பேரரசர் வாழ்விலும் கூடக் காணலாம். தேசிய வலுவும் அரசியல் வலுவும் படிப்படியாகத் தமிழகம் நோக்கி மீண்டும் படர்ந்தன. இதனை முதன் முதலில் நன்கறிந்து பயன் படுத்த முனைந்தவர் போர்ச்சுகீசியர்களே யாவர்.
போர்ச்சுகீசியர் வளர்ச்சி:
இராமராயன் எதிர் நடவடிக்கைகள்: 1542 1547
தென்னகத்திலும் கீழ் திசையிலும் உலகிலும் போர்ச்சுசீசிய வாழ்வின் பொற்காலம் 16-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகிய விசயநகரப் பேரரசின் மூன்றாம் மரபுக் காலமே. அந்நூற்றாண்டின் நடுவில் அது உச்சநிலை எய்திற்று. கத்தோலிக்க சமயத்தை உலகில் பரப்பிய பெரியாருள் இந் நூற்றாண்டில் மேல்திசையில் எழுந்த ஒளியான இக்னேஷியஸ் லாயொலாவின் மாணவரான பிரான்ஸிஸ் மாணவரான பிரான்ஸிஸ் ஸேவியர் கீழ்திசை ஒளியாக விளங்கினார். தமிழகத்தின் முத்திசைக் கடற்கரை களையும் சுற்றிப் பரவை வாழ்வில் ஈடுபட்ட மீனவர்களையும், முத்துக்குளிக்கும் முத்துப் பரவரையும் தென்னகத்திலே ஒரு புதிய சமய, சமூதாய, அரசியல் சத்தியாக்க அவர் பாடுபட்டார். வைதீக சமயத்தின் சமுதாயக் கொடுமைகளையும், முஸ்லிம்களின் போர் வெறிக் கொடுமை களையும் எதிர்த்து நிற்கப் போர்ச்சுகீசிய அரசன் குடிகள் என்ற உரிமையையே கைகாவற் படையாக வழங்கும்படி அவர் மீனவர் களைத் தூண்டி எழுப்பினார். இதன் எதிரொலியாக, கத்தோலிக்க அரசியல் வேட்டுவரும், முஸ்லீம்களைப் போலவே கோயில்களைக் கொள்ளையிட்டுச் சமயப்பணி பரப்பும் புண்ணியத்துடன் கொள்ளைப் பொருளும் பெற்று அரசியலில் ஆதிக்கமும் பெறும் சமய சஞ்சீவியை மேற்கொண்டார்கள்.
1542-ல் போர்ச்சுகீசிய ஆட்சியாளர் மார்டின் அல்பான் சோடி சூசா பட்கலைக் கொள்ளையடித்தான். கரையோரங்களி லிருந்து தொடங்கி மீனவர் உதவியுடனும் கிருஸ்தவப் பணியாளர் ஊக்கு தலுடனும் போர்ச்சுகீசியர் உள்நாட்டுக் கோயில்களைக் கூடக் கொள்ளையிடுதல், கொலை, கொள்ளை வல்வந்தச் செயல்கள் மூலம் சமய மாற்றுதல் ஆகியவற்றைச் செய்யலாயினர். 1545-ல் திருப்பதி கூட இச் செயல்களுக்கு