100
அப்பாத்துரையம் - 17
சதாசிவன் பெயரால் இராமராயனே ஆட்சி செய்யத் தொடங் கினான். சதாசிவன் பெயரளவில் பேரரசனாக 1576 வரை உயிருடன் இருந்தாலும், இராமராயனே உண்மையில் பேரரசனாகி (1542 - 1565) அரவீட்டுமரபின் முதல்வனானான்.
வைதிக இயக்கம்: 16 -18 நூற்றாண்டுகள்
14-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து தென்னாட்டு அரசியல் வாழ்வின் மையமும் விசயநகரப் பேரரசின் தாயகத் தலைமை யிடமும் தமிழகத்திலிருந்து அதன் வட திசைக்குமாறி விட்டது. இந்நிலை அடுத்த இரண்டு நூற்றாண்டுகளில் கூட மாறவில்லை. கசபதி மரபினர் ஆட்சி அதை இன்னும் கிழக்கு நோக்கி இழுத்து வந்தது. எனவேதான் கடப்பை, கர்நூல், பல்லாரி, அனந்தப் பூர்ப்பகுதிகள் இன்றளவும் இராயலசீமா என்ற பெயருடன் இலங்கு கின்றன. இப்பகுதியும் இதனையடுத்த வடதிசைப் பகுதிகளான மராட்டியமும், ஆந்திரப் பகுதிகளும் அரசியல் போராட்டக் களங்களாக மட்டுமன்றிச் சமுதாய சமயப் பண்பாட்டுப் போர்க் களங்களாகவும் நிலவின. இதனால் மக்கட் சார்பான இந்திய மாநிலத்தின் பக்தி இயக்கம் தென்திசையிலிருந்து இமயம் வரை பரவிய இதே காலத்தில், இதனை எதிர்த்த வைதீக இயக்கமொன்று ஆந்திர நாட்டிலிருந்து விசயநகர ஆட்சியிலேயே வட தமிழகம், கீழ்திசைமலபார், கன்னடம், தென் மராட்டியம் ஆகிய பகுதிகளிலே ஆதிக்க வகுப்பினர் இயக்க மாய்ப் பரவ இடம் ஏற்பட்டது. பக்தி இயக்கம் சமய இலக்கியத் துறைகளில் தாய் மொழி வாழ்வும், சமுதாயத்துறையில் சமத்துவமும், பெண் கல்வி, பெண்ணுரிமை யும் பரப்பிய தென்றால், இவ்வைதீக இயக்கம் மேனாட்டுக் கல்வி வரும்வரையும் அதுகடந்து இன்றும் கூட, அவ்வெல்லாத் துறை களிலுமே வினைமுறைகள் மூலம் சமஸ்கிருத ஆட்சியையும், வேதபுராண சுமிருதி ஆட்சிகளையும், வருணாசிரம ஒழுக்க முறையையும் பரப்பத் தொடங்கியுள்ளது. மேனாட்டுக் கல்வியால் ஏற்பட்ட பகுத்தறிவொளியும் தமிழகத் தேசிய மறு மலர்ச்சி இயக்கமுமே நம் நாளில் இதை மாற்றி வருகிறது.
தேசிய வாழ்வின் இப்புது மலர்ச்சித் தொடக்கத்துக்குரிய தடத்தை 15-ஆம் நூற்றாண்டின் பிற் பகுதியிலே தென்னக