உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 17.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




xii

நூறாண்டு வாழ்க

முன்மொழி யாகிய முதுபெருந் தமிழை

முழுவதும் பழுதறக் கற்றும்,

தென்மொழி யாவையும் அயன்மொழி பலவும் தெளிவுற முறைப்படித் தேர்ந்தும், இன்மொழி-மேவிய இளநகை-எழிலார்

இயல்புடன் - அடக்கமுங் கூடிப்- பன்மொழிப் புலவர் பணிவுடை அப்பாத் துரையெனும் பண்டிதர் கண்டோம்!

முந்தைய நாட்களில் முடிபுனை அரசும்

மொழியியற் புலவரும் போற்றச்,

செந்தமிழ் மாந்தர் சிறப்பொடு திகழ்ந்து

திறமுடன் வளர்த்தனர் தாயை! சிந்தையில் தீமையை நிறைத்தவர் சதியால்

சிறுமையைத் திணித்திடும் போழ்தில்...

இந்தியைச் சாடி, எழில்மொழி பேணிட,

இணையிலாத் தழும்புகள் ஏற்றார்!

அப்பாத்துரையம் - 17