194
அப்பாத்துரையம் - 17
தோல்விகளிலே தளராத நின்று வெற்றி காணும் திறமுடைய டுயூப்ளே இப்போது பிரிட்டிஷாரின் நண்பரிடையே பூசல்விளைத் தும், மராத்தியரைப் படையெடுக்கத் தூண்டியும், புதிய வழிகளில் போரின் போக்கைத் திருப்ப முயன்றான். ஆயினும் 1753-ல் பிரஞ்சுத் தலைவன் தேகர்ழானைப் (Dekerzean) பாகூர்ப் போரில் வென்ற தன் மூலம் பிரஞ்சு வலிமை நிலையாகத் தளர்வுறத் தொடங்கிற்று.
இந்த ஆண்டிலேயே அரசியல் சூழ்ச்சிகளில் வல்ல பிரஞ்சுத் தலைவன் புஸி, வட சர்க்கார் என்ற கரையோர ஆந்திரப் பகுதி களின் வரி வருமான உரிமையை நிஜாமிடமிருந்து பெற்று பிரஞ்சு மதிப்புத் திடுமென முற்றிலும் சரியாமல் காத்தான்.
வந்தவாசிப் போர்: 1760
கீழ்த்திசையில் மேல் திசை ஏகாதிபத்தியம் நிலை கொள் வதற்கு உகந்த பண்புகளில் ஒன்று கடலாட்சியேயாகும். இதனைக் கண்டுணர்வதிலும் பிரிட்டிஷாருக்குப் பிரஞ்சுத் தலைவர்களே வழிகாட்டியாய் இருந்தனர். முதல் பிரஞ்சு ஆட்சி முதல்வன் லாபோர்டனாய் அத்தகைய கடற்படையை அருமுயற்சியால் படைத்துருவாக்கியிருந்தான். ஆனால், ஆங்கிலேயரிடம் தொடக் கத்தில் இருந்ததைவிட, பிரஞ்சுகாரரிடம் மிகுதியான ஒற்றுமைக் கேடும், போட்டி பொறாமை, பூசல்களும் இருந்ததாலும் தனி மனிதர் கடல்கடந்த தேசிய நோக்கு பிரஞ்சு மக்களிடையே பரவாததாலும், தென்னகத்தில் இதன் பயனைப் பிரிட்டிஷாரே கைக்கொள்ள முடிந்தது.
1758-ல் பிரஞ்சு ஆட்சியாளர் கரையிலும் கடலிலும் கவிந்து கீழ்த்திசையில் சென்னையையே முற்றுகையிட்டனர். ஆனால், கடல் வெற்றிகளை பிரஞ்சுக்காரர் சரிவரப் பயன்படுத்தாததால் பிரிட்டிஷ் கடற்படை சென்னை முற்றுகை தகர்த்ததுடன் அமையாது, எதிர் தாக்குதலே நடத்த முடிந்தது. அச்சமயம் வங்கத்திலே ஆட்சி யாளனாயிருந்த கிளைவ் தென்னகத்தின் சூழலறிந்து பிரிட்டிஷ் பெரும் படைத்தலைவனான சர்அயர் கூட்டை உடனே சென்னைக்கு அனுப்பினான். வரும்