உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 17.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 2

195

வழியிலேயே வந்தவாசிக் கருகில் 1760-ல் அவன் பிரஞ்சுப் படைத்தலைவன் புஸியுடன் போர் செய்து பெரும் புகழ் வெற்றி நாட்டினான். இதில் சிறைப்பட்ட புஸி பிரான்ஸுக்கு அனுப்பப்பட்டாலும் திரும்ப கீழ்த்திசை மீளவில்லை. தாய் நாட்டிலேயே, அவன் அருமையை அறிய முடியாத ஒரு முதிராத் தேசியத்தால் அவன் தூக்கிலிடப்பட்டு மாண்டான்.

சென்னை முற்றுகைக்கு மாறாக, இப்போரின் பின் பாண்டிச் சேரியே முற்றுகையிட்டுப் பிடிக்கப்பட்டது. போர் முடிவில் அது திருப்பித் தரப்பட்டாலும், அது என்றும் திரும்ப வலுப்பெற முடியவில்லை. ஏனெனில் பிரிட்டிஷார் பிடித்த சமயம் அதன் கோட்டை கொத்தளங்கள் தகர்க்கப்பட்டன. கிளைவின் தூண்டுதலால் போர் முடிவில் ஏற்பட்ட உடன் படிக்கை, கோட்டை கட்டுதல், படைகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு ஒரு தடையிட்டது.

செஞ்சி வீழ்ச்சி: 1761

செஞ்சிக் கோட்டையின் பிரஞ்சுக் காவலாளன் மாக்கிரார் 1761-ல் செஞ்சிக் கோட்டையை இழக்க வேண்டிய தாயிற்று. ஐந்து மாத முற்றுகைக்குள் கையூட்டு, உட்பிளவு ஆகியவற்றின் உதவி யால் பிரிட்டிஷ் படைத்தலைவன் படை முகவன் ஸ்மித் செஞ் சியைக் கைப்பற்றினான்.

வரலாற்றுப் பெருமைமிக்க செஞ்சி, கீழ்த்திசையின் திராய் என மேலை உலக இலக்கியப் புகழ் பெற்ற செஞ்சிக் கோட்டை ஒரு நாளில் புகழுச்சி யடைந்த தேசிங்கு ராஜனின் வீரவரலாறு கண்ட தமிழர் புரிசை - பிரிட்டிஷார் கைப்பட்ட அன்றே அதன் பெருமையை முற்றிலும் இழந்தது. இன்று அது பழமையார்வலர், கலையார்வலர் காட்சிப் பொருளாக மட்டுமே நிலவுகிறது.

செஞ்சியின் பழமை எல்லை நமக்கு வந்து எட்டவில்லை - இடைக்காலத்தில் அது அடைந்த பெருமைகூட இன்று நிலவ வில்லை. புதிய தமிழகத்தின் அறிவே -தேசியப் புத்துணர்வே கலையார்வம் கடந்த புது வாழ்வை அதற்கு அளிக்கக் கூடும். புதிய தேசியத்துக்கே இது இன்றியமையாத தேவையாகும். ஏனெனில் செஞ்சி தமிழகத்தின் தலைசிறந்த கோட்டையாயினும் ஒரே

சி