உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 17.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




196

அப்பாத்துரையம் - 17

கோட்டையல்ல. தூங்கெயிலும், கானப்பேரெயிலும் கண்ட பண்டைத் தமிழகத்தின் கோட்டை மரபில் வந்த பல கோட்டை களில் அது ஒன்று.

அயலாட்சியாளர் இத்தகைய கோட்டைகளை நாட்டு ஒற்றுமைக்குக் கேடாகக் கொள்ளலாம். நாட்டுத் தேசியத்திலே ஏகாதிபத்தியப் பண்புடைய வலிமைத் தேசியம் அதை வெறுக் கலாம். ஆனால், தமிழர் பண்டைக் குடியாட்சி மரபு பரப்பு வலிமையையும், சமத்துவத்தையும் பேண இத்தகைய கோட்டை வாழ்வுகள் புதுமுறையில் பெரும் பயன் தருவது ஆகும்.நாட்டுப்புற வாழ்வை அழித்து வாழும் தற்கால நகரங்களைப் போலன்றி, அவை அதற்குரிய முதுகெலும்பாகவும், வளர்ப்புப் பண்ணைகளாக வும் விளங்குவது உறுதி.