தென்னாட்டுப் போர்க்களங்கள் - 2
39
தாலும், தமிழகத்துக்கும் வட திசைக்கு மிடையே ஹொய்சளப் பேரரசு வளர்ந்து வந்ததாலும், தமிழக முஸ்லிம்கள் மீது தில்லியின் ஆதிக்கக் கரம் எட்டவில்லை. ஆனால், இந்தத் தன்னாண்மை மதுரை சுல்தான்களுக்குச் சாதகமாக இல்லை. தில்லி முஸ்லிம் அரசின் உதவி அவர்களுக்குக் கிட்டாமல் அது அவர்களைத் துண்டு படுத்தி, மீண்டும் எளிதில் வீழ்ச்சியடைச் செய்தது.
சுல்தான்கள் என்ற பெயருடன் மதுரையில் ஆண்டவர்களில் எண்மர் பெயர்கள் நமக்கு வந்தெட்டியுள்ளன. அவர்கள் ஜலாலுதீன் அஃசன்ஷத (1336), அலாவுதீன் அரோகர் அல்லது அதூஜிஷா, குத்புதீன் பிருஜ்ஷா, கியாஸுதீன் முகமது தம்கான்ஷா (1339), நாசிருதீன் முகமதுஷா (1344), 'அமைதியாளன்' அதில்ஷா (1358), 'உலக மன்னன்' முபாரக்ஷா (1363 - 1368), அலாவுதீன் சிக்கந்தர்ஷா (1372 - 1377) ஆகியோர். தவிர, நஸ்ரத்துதீன், ஷம்ஸுதீன், நாசிருதீன் இஸ்மாயில் ஃவத் ஆகியோர்களும் மதுரை முஸ்லிம் அரசுக் குரியவர்களாகக் குறிக்கப் பட்டுள்ளனர்.
கோதாவரிப் போர் : 1326
காம்பிலி அரசை நிறுவிய சிங்கய நாயகன் காலத்திலும் அவன் மகன் காம்பிலி தேவன் காலத்திலும் காம்பிலி அரசு மிகவும் வலிமை வாய்ந்ததாக இருந்தது. தேவகிரிக்கும் ஹொய்சளருக்கும் நடைபெற்ற போர்களில் காம்பிலி அரசர் தேவகிரியை ஆதரித்து ஹொய்சளரை எதிர்த்து வந்தனர். தனால் ஹொய்சளருக்கும் காம்பிலிக்கும் எப்போதும் பகைமைப் போட்டி மிகுதியாய் இருந்தது.
காம்பிலி நகரம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ளது. சோழப் பெரும் பேரரசர் ஆட்சிக் காலத்தில் அதில் சாளுக்கியர் அரண்மனை இருந்ததையும், அரண்மனையும் நகரும் அடிக்கடி எரியூட்டப் பட்டதையும் கேள்விப் பட்டிருக்கிறோம். காம்பிலி அரசு இந் நகரையே தலை நகராகக் கொண்டு, தற்காலப் பெல்லாரி மாவட்டம், பம்பாய் மாகாணத்தின் இரேய்ச்சூர் டை நிலம், தார்வார் மாவட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய தாக இருந்தது.