உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 17.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 2

ல் இம்மரபினன்

6

45

கிடையாது. ஆனால், வலிமை வாய்ந்த சிற்றரசரான சாம்புவராயர் குடி கீழ்த் திசையில் வளர்ச்சி யடைந்திருந்தது.1339- ஒருவன் சகலலோகச் சக்கரவர்த்தி இராசநாராயண சாம்புவராயன்' என்ற ஆரவாரப் பெயருடன் ஆட்சி செய்யத் தொடங்கியிருந்தான். தமிழகத்தின் பல பகுதிகளிலும் மதுரையைச் சுற்றிலும் இம்மரபினர் பலர் ஆட்சி செய்திருந்தனர். தென்னகத்தின் வடதிசை தேசியக் குழுவினரும் ஹொய்சளரும் தமிழக முஸ்லிம்களுக் கெதிராக இவர்களை ஊக்கியிருந்தனர். மூன்றாம் பல்லாளனும் அவர்கள் நட்புடனே தமிழகத்தில் தன் ஆட்சியை வலுப்படுத்தினான் என்று தோற்றுகிறது.

மூன்றாம் பல்லாளன் தமிழகத்தில் திருவண்ணாமலையையே தன் மூலதளமாகக் கொண்டிருந்தான். அங்கிருந்து தமிழகத்தின் வட எல்லை முழுவதையும் உட்கொள்ளும் முறையில் மூன்று வரிசைகளாகப் பல வல்லரண்களை அமைத்தான். மற்றொருபுறம் திருச்சிராப்பள்ளி, புதுக் கோட்டை, இராமநாத புரம் வழியாக இராமேசுவரம் வரை தன் படைத் தளங்களை அமைக்கவும் முயன்றான்.

மதுரை முஸ்லிம் மரபினர் கொள்ளையிலும் ஒருவர்க் கொருவர் அரசுரிமைப் பூசலிடுவதிலும் நேரம் கழித்தனராதலால், தம்மைச் சூழ்ந்து அமைக்கப்பட்டு வரும் முற்றுகை நடவடிக்கை யைக் கவனியா திருந்தனர். ஆனால், 1340-ல் மதுரையில் ஆண்ட ஜலாலுதீன் ஹசன்ஷாவைக் கொன்று ஆட்சி கைக்கொண்ட அலாவுதீன் உதௌஜீ திருவண்ணாமலை மீது படையெடுத்து மூன்றாம் பல்லாளனைத் தாக்கினான்.

1341-ல் நடைபெற்ற இப்போரில் உதௌஜீயின் கையே ஓங்கிற்று. ஆனால், வெற்றி பெற இருக்கும் தறுவாயில் வில்வீரன் ஒருவன் எய்த அம்பு அவன் கண்ணில் பாய்ந்தது.

கண்ணனூர்க் குப்பம் முற்றுகை: 1342 ஹொய்சளர் வீழ்ச்சி: 1344

திருவண்ணாமலை வெற்றியை அடுத்து மூன்றாம் பல்லாளன் பழய ஹொய்சளர் தென் தலைநகரான கண்ணனூர்க் குப்பத்தை முற்றுகையிட்டான். ஆறுமாத முற்றுகையால்,