உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 17.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




46

அப்பாத்துரையம் - 17

கோட்டையினுள்ளி ருந்த முஸ்லிம் வீரர்கள் எதிர்ப்புத் தளர்ந்து பேரவதிக்காளாயினர்.

சில

உதௌஜீக்குப் பின் அவன் மருமகன் ஆளத் தொடங்கிய நாட்களிலேயே கொல்லப்பட்டான். அடுத்த ஆட்சியுரிமையாள னாக வந்த கியாஸுதீன் தம்கானி மதுரை முஸ்லிம்களிடையே கூடக் குருதி வெறியாட்டத்தில் ஈடிணை யற்றவன். அவன் தன்மை யறியாத ஹொய்சள மன்னன் எளிதில் அவன் சூழ்ச்சிக்கு உட்பட்டான்.

கோட்டைக் குள்ளிருந்த முஸ்லிம் வீரர் சரணடைவதாக வாக்களித்தனர். இச்சூழ்சிலை ஹொய்சளர் வெற்றிக்கு உகந்தவை யாகவே தோற்றிற்று. ஆனால், தம் தலைவனுடனேயே இதுபற்றிப் பேசுவது நலம் என்று முஸ்லிம் வேண்டினர். சூதறியாத பல்லாளன் இதற்கு இசைந்தான். போர் நிறுத்தி அவன் வீரர் மதுரை முஸ்லிம் மன்னன் வருகைக்காகக் காத்திருந்தனர். ஆனால், தம்கானி இரவோடிரவாக நானூறு படை வீரருடன் ஹொய்சளர் பாசறை மீது பாய்ந்தான். வெற்றி வாயிலில் நின்ற ஹொய்சளர் படுதோல்வி யடைந்தனர். தம்கானியின் மருமகனும் அடுத்த உரிமையாளனு மான நாசிருதீன் முதுமை வாய்ந்த மூன்றாம் பல்லாள மன்னனைக் கைப்பற்றி அவன் யானை, குதிரைகளையும் செல்வக்குவைகளையும் கொள்ளையிட்டபின், அவனையும் உயிரோடு தோலுரித்து வதைத்துக் கொன்றான். உரித்த மேனியாகவே வீர ஹொய்சள மன்னன் உடலம் மதுரைக் கோட்டை வாயிலில் நெடுநாள் தொங்கவிடப் பட்டிருந்ததாம்! இஸ்லாமிய வரலாற்றாசிரியர் இபுன் பத்தூதா மதுரைக்கு வந்த போது, கோட்டை வாயிலில் இந்தக் கோரக் காட்சியைத் தம் கண்ணாரக் கண்டதாகக் குறிப் பிட்டுள்ளார்.

17-ம் நூற்றாண்டிலிருந்து மூன்று நூற்றாண்டுகள் வரை சாளுக்கியருடனும் சோழருடனும் பாண்டியருடனும் போராடி அப்பேரரசுகள் எல்லாம் அழிந்த பின்னும் நீடித்து நிலவியிருந்த ஹொய்கள் அரசு தன் வாழ்வின் உச்சநிலை கடவாமலே மூன்றாம் வீர பல்லாளன் முடிவுடன் முடிவடைந்தது. அவன் இறந்த பின்னும் அவன் மகன் நான்காம் பல்லாளன் கலைந்த வாழ்வை நிலைநாட்ட முயன்றதுண்டு. ஆனால், இரண்டாண்டுகளுக்குள்,