உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 17.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 2

47

1344-ல் முதலாம் ஹரிஹரன் ஆட்சியுடன் தன் ஆட்சியை இணைத்து ஆண்ட முதலாம் புக்கன், ஹொய்சள அரசரை முறியடித்து அதை தன் புதிய விசய நகரப் பேரரசின் ஒரு பகுதியாக்கினான்.

'ஹொய்சளர் குடி மரபுக்குரியதாயிருந்த நிலவலய மேகலை விசய நகர மரபுக்கு உரிய வண்ணமேகலையாயிற்று' என்று அந்நாளையக் கல்வெட்டுக்கள் இவ்வெற்றியை அழகுபடக் குறிக்கின்றன.

ஹொய்சளப் பேரரசின் அருகே சிறிய அரசாக நிலவிய விசய நகர அரசு அதை விழுங்கிய பின் விரைந்து தென்பேரரசாக வளரத் தொடங்கிற்று.

ஏற்கனவே 1340-ல் பண்டைச் சாளுக்கிய தலைநகரான வாதாபி கைக் கொள்ளப் பட்டிருந்தது. ஹொய்சளப் பேரரசின் மேலுரிமையை ஏற்றிருக்க துளுநாடு 1345-லேயே விசய நகரத்துக்கு அடிபணிந்து அதன் மேலுரிமையை ஏற்றுக் கொண்டது. 1346- க்குள் பேரரசு மேல் கடலிலிருந்து கீழ் கடல் வரை பரவிவிட்டது. பண்டைச் சேர அரசர் மரபைப் பின்பற்றி விசய நகராண்ட உடன் பிறப்பாளர் ஐவரும் சிருங்கேரியில் ஒருங்குகூடி இவ்வளர்ச்சிப் படியை ஒரு விழாவாகக் கொண்டாடியதாக அறிகிறோம்.

அவர்கள் தென் திசையில் இஸ்லாமிய எதிர்ப்புப் பேரரசின் வளர்ச்சி விழாக் கொண்டாடியதற்கு அடுத்த ஆண்டிலேயே அவர்களுக்கு வட திசையில் தென்னாட்டிலேயே ஒரு முஸ்லிம் பேரரசும் எழுந்தது.

பாமினிப் பேரரசின் பிறப்பு : 1347

தில்லிக்கும் தென்னாட்டின் வடகோடிக்கு மிடையே 14-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முதல் முதலாக ஏற்பட்ட தொடர்பு 30 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கவில்லை. இஸ்லாமிய வரலாற்றாசிரியர் பெருமிதத்துடன் வகுத்துரைத்த வடபேரரசின் தென் மாகாணங்கள் ஐந்தில் உண்மையிலே, பேரரசுடன் ணைந்திருந்த மாகாணம் தேவகிரி ஒன்றே. இது 1316-ல் தோன்றி, 1347-க்குள் தென்னகத்தின் ஒரு தனிப் பேரரசாகி இரண்டு நூற்றாண்டு வாழ்ந்தது. அதனை உட்கொண்டிருந்த வட பேரரசு