உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்ச் செல்வம்

77

வழங்கிய பசு இன்றைய வெளியுலகப் பசுவன்று. தமிழினப் பசுவே என்பதை இந்தியப் பசுக்களுக்கு மட்டுமே உரிய சிறப்புப் பண்பான கூன் அல்லது திமில் எடுத்துக் காட்டுகிறது,

பால் பொங்கல் தமிழன் ஆவின் செல்வத்தை வளர்த்து முன்னேறிய முன்னேற்றப் படியைக் காட்டுகிறது.

பழங்களுக்குத் தமிழில் கனி என்றும் பழம் என்றும் இரண்டு பெயர்கள் உண்டு. பழத்தைத் தெலுங்கர் 'பண்டு' என்பர். கனி, இயற்கை மனிதனுக்குத் தருவது. பழம், மனிதன் பழக்கி ஆக்குவது. முன்னதற்குக் கொட்டை இருக்கும். சுவை சிறியதாயிருக்கும். எட்டாக் கொம்பில் வளரும். பலவற்றில் முள் மிகுதி இருக்கும். மனிதன் அவற்றைப் பழக்கிப் பண்படுத்தினான். கொட்டை நீக்கினான். அல்லது சிறுகவைத்தான். சுவை பெருக்கினான். கொம்பின் உயரம் குறைத்தான். முள் நீக்கினான் அல்லது குறைத்தான். இவ்வகையில் மேலை யுலகம் படைத்த பழங்கள் ஆரஞ்சும் ஆப்பிளும். தமிழன் படைத்த பழங்கள் மா, கதலி, பலா. இவற்றையே அவன் முப்பழம் என்றான்.மூன்றுக்கும் இயற்கை தந்த இயற்கைக் குணங்களும் உண்டு. தமிழன் கொடுத்த தீந்தமிழ்ப் பண்பும் உண்டு. கதலியில் அவன் ஓட்டை நீக்கினான். காட்டுக் கதலி அல்லது கல்வாழை இதைச் சுட்டிக் காட்டுகிறது. பலாவில் முள் நீக்கினான். சுவையூட்டினான். மலைப்பல வென்றும் இமைப்பலாவென்றும் ஈரப்பலா வென்றும் வழங்கும் இயற்கைப் பலாக்கள் இதைக் குறித்துக் காட்டுகின்றன. மாவில் கொட்டை சிறுத்துச் சுவை பெருக்கப் பெற்ற மாவே தேமா ஏனையது புளிமா, காட்டிலந்தையில் மாவின் சுவையேற்றி இடை க்காலத்தில் தமிழன் ஆக்கிய கனியே முந்திரி. இஃது இன்றும் தென் தமிழகத்தில் 'கொல்லாமா' என்று குறிக்கப் படுகிறது. மலை நாட்டில் அதற்கு வழங்கிய ‘காசுக்கொட்டை’ என்ற அதன் பெயரே அதன் இன்றைய ஆங்கிலப் பெயர் (Cashewnut) ஆயிற்று.

தமிழகம் உட்பட இன்று உலகம் வழங்கும் மா, பலா, கதலி வேறு. தமிழன் வளர்த்த பண்புடை முப்பழம் வேறு. தான் வளர்த்துப் பழக்கிப் பேணியவற்றையே தமிழன் தேமா, தேம்பலா, தேங்கதலி என அழைத்தான். இந்த அடை தமிழிலக்கியத்தில் வேறெப்பழத்துக்கும் கிடையாது.