உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

||-

அப்பாத்துரையம் - 19

கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் இலெய்டன் பட்டயங்கள் இதற்குச் சான்று பகர்கின்றன.

தமிழர் விழாவில் தழைக்கும் பண்புகள்

பொங்கல் தமிழ்விழா. தமிழர்விழா. போலிப் பழைமைக்கு ஆட்பட்ட தமிழன் குடுவை வாழ்வை விட்டுப் பரவை வாழ்வின் உலக நோக்கைக் கொள்ளத் தூண்டுதலளித்தல் வேண்டும் விழா அது, அதே சமயம் அது போலிப் புதுமையில் மிதந்தாடும் மிதவல் வாழ்க்கையைத் தமிழன் தமிழகத்தின் வேர்ப்பண் புணர்ந்து, தமிழ், தமிழர், தமிழினம், தமிழ்ப் பண்பு அடிப்படை யாக ஓருலகில் ம் பெறத் தூண்டுதல் வேண்டும் விழாவும்

அதுவே.

உலகின் மிகப் பழைமையான இயற்கை விழாக்களுள் பொங்கல்விழா ஒன்று. அது உழவர் விழா. உழவின் எல்லாப் படிவளர்ச்சிகளையும் அது காட்டுகிறது. நெற்பயிர் தமிழர் நாகரிகத்துக்கும் சீன நாகரிகத்துக்கும் அடிப்படை. அரிசிப் பொங்கல் இதைக் குறிக்கிறது. கரும்பு சீனத்துக்கும் தமிழகத்துக்கும் தனியுரிமையுடைய வேளாண்மைச் செல்வம். கரும்பிலிருந்து சர்க்கரை ஆக்கிய முதலினம் தமிழினமே. தமிழன் கண்ட சர்க்கரை, இன்று உலகெங்கும் தமிழ்ப் பெயருடனேயே வழங்கி எல்லா இனத்தவர் நாவுக்கும் இனிப்பூட்டுகிறது. சர்க்கரைப் பொங்கல் இதைச் சுட்டுவது.

மேய்ச்சல்நில வாழ்வு அல்லது முல்லைநில வாழ்வில் மனிதன் எடுத்துப் பழக்கிய முதல் விலங்குகள் ஆடும் மாடுமே. இதுபோலப் புல்வெளிப்பாலை, மணற்பாலை, முட்புதர்ப்பாலை ஆகியவற்றில் மனிதன் எடுத்துப் பழக்கிய விலங்குகளே, குதிரை,

டகை முதலியன. மலையாளக்கரை, பர்மா, இலங்கை, மலாயா போன்ற குறிஞ்சியும் முல்லையும் கலந்த நாடுகளில் மனிதன் பழக்கிய விலங்கே யானை. இவற்றுள் ஆட்டையும் குதிரையையும் பழக்கியவர் வட மேற்காசியப் புல்வெளியில் பண்டு வாழ்ந்த ஆரியர்களே.குதிரையும் ஒட்டகையும் பழக்கியவர் அராபியர். மாடு அல்லது ஆவினத்தைப் பழக்கியவரும் யானையைப் பழக்கியவரும் இந்தியாவில் வாழ்ந்த தமிழினத்தவர்களே. எகிப்தியர் போன்ற பண்டை நாகரிக மக்கள்