உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்ச் செல்வம்

75

பட்டினம் என்ற பெயர் இன்றளவும் தமிழ் ஒன்றில்தான் உண்டு. மயிலைப் பட்டினத்தில் வாழ்ந்த ஒரு திருவள்ளுவர்தான் சாவா முழுமுதல் உலக நோக்கைத் தமிழனுக்கும் தமிழன் மூலம் உலகுக்கும் பண்டு அளித்தார். அணிமைக் காலத்தில்கூடத் தற்பற்று முற்றத்துறந்தும் தாய்ப்பற்றும் உலகப்பற்றும் துறவாத பட்டினத்தடிகள் நாகப்பட்டினத்திலேயே வாழ்ந்து உலக அறம்

கண்டார்.

தமிழ் வாழ்வு தமிழகம் கடந்து தென்னாட் தன்னாட்டிலும், தென்னாடு கடந்து இந்தியாவிலும், இந்தியா கடந்து உலகிலும் வரலாறு காணாக் காலத்திலேயே பரந்ததுண்டு. இதற்குச் சான்றுகள் பல காட்டலாம். பட்டினம் என்றசொல், கடற் கரைத் துறைமுக நகரத்தின் பெயர்களாகத் தமிழகத்தில் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் இருப்பதே இதற்கு ஒரு விளக்கம் ஆகும். கீழ்க் கடற்கரையில் குலசேகரன்பட்டினம், காயல்பட்டினம், நாகப்பட்டினம், சென்னைப்பட்டினம், சதுரங்கபட்டினம் ஆகியவை தமிழகத்தில் உள்ளன. மசூலிப்பட்டினம், விசாகப் பட்டினம் ஆந்திரத்தில் உள்ளன. கங்கைக்கரையில் பாட்னா உண்மையில் பட்டினமே. மேல் கடற்கரையில் சோமநாதபுரத்தின் பழம் பெயர் பட்டினம் என்றே காணப்படுகிறது.

பண்டைத் தமிழர் உலகளாவிய கடல் வாணிகக் களமாக நிலவிய பல துறைமுகப் பட்டினங்களில் காவிரிப்பூம்பட்டினம் ஒன்று. இன்றைய பாண்டிச்சேரி அல்லது புதுச்சேரி பண்டு பொதுவு அல்லது எயிற்பட்டினம் என்று வழங்கிற்று. இன்றைய மகாபலிபுரம் அல்லது மாமல்லபுரம் மல்லைப்பட்டினம் என இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் விளங்கிற்று. வஞ்சி, முசிறி என்ற மேற்கரைப் பட்டினங்களிலும் காவிரிப்பூம்பட்டினத்திலும் எயிற்பட்டினத்திலும் கிரேக்க ரோமர் குடியிருப்புகள் இருந்து தமிழர் வாழ்வின் பொங்கலுடன் பொங்கின. நாகையில் சோழப் பேரரசர் ஆட்சிக்காலம்வரை சீனர் குடியிருப்புகள் இருந்தன. கடாரம் அல்லது மலாய் நாட்டுப் பேரரசாண்ட பேரரசரும் சீனப் பேரரசரும் அதில் புத்த கோவில்கள் எழுப்பி அவற்றுக்கு மானியம் விட்டிருந்தனர். அக் கோவிலிலுள்ள புத்தர் பொற்சிலை உலகப் புகழ்பெற்றது. தமிழ்ப் பட்டயங்களிலும் இலக்கியங் களிலும் குறிக்கப்பட்டுள்ளது. இன்று இலண்டன் மாநகர்க்