உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. ஓருலகில் தமிழன்

நாகரிகமற்ற மனிதன் தனி வாழ்வு வாழ்ந்தான். குறுகிய தன்னலம், சூழ்ச்சி அவன் பண்பாய் இருந்தது. அவன் வாழ்வு குடுவை வாழ்வு. இந்நிலையிலிருந்து குடும்ப வாழ்வு, சமுதாய வாழ்வு அவனை மீட்டது. குடி, ஊர், நாடு, நகர், பட்டினம், உலகம் என அவன் வாழ்வு விரிவடைந்தது.அவன் அறிவும் விரிவடைந்தது. பண்பும் உயர்வடைந்தது. அவன் பரவை வாழ்வு வாழத் தொடங்கினான். ஒருவகை நோக்கி வளரத் தலைப்பட்டான். வளர்ந்து வருகிறான்.

குடிவாழ்வில் தற்பண்பு உண்டு. பரவை வாழ்வில் ஒப்புரவு உண்டு. முன்னது பண்பாடு. பின்னது நாகரிகம். இரண்டும் சேர்ந்ததே பண்பாடுடைய நாகரிகம் அல்லது உயிர் நாகரிகம். ஒருவகை நோக்கி மனிதனை வளர்ப்பது அதுவே. நாகரிகமல்லாத தற்பண்பு வாழ்வு குடுவை வாழ்வாகும். அஃது உயிரற்ற நாகரிகம். நாகரிகம் வளர்க்காது. ஒருவகை நோக்கி வளராது.

குடும்ப வாழ்வில் தமிழன் வளர்த்த இல்லறம் போன்ற சிறந்த அறம் வேறெங்கும் கிடையாது. அவன் வகுத்த மக்களாட்சிக்கு அவன் கொடுத்த ‘குடியாட்சி' என்ற பெயர் இதற்குச் சான்று. இதற்குரிய மேலைநாட்டுச் சொல்லும் (Democracy) சமற்கிருதச் சொல்லும் (ஜனநாயகம்) இதே வேர்ப்பொருள் சுட்டாதது குறிப்பிடத்தக்கது. அவன் ஊர், நாடு வகுத்தான். குடியாட்சியின் பகுதிகளுக்கு அவன் கொடுத்த பெயர்கள் இதை விளக்கும். அவை ஊராண்மை, நாட்டாண்மை என்பன. நாடு கடந்து அவன் நகர் கண்டான். அது நாட்டுக்கு ஒற்றுமை தந்தது. நாட்டு நாகரிகம் வளர்ந்தது. நாகரிகம் என்ற பெயர் இதனைக் குறிக்கும். இத்துடன் அவன் அமையவில்லை. வெளிநாட்டுப் பரவைத் தொடர்பு தரும் துறைமுக நகர வாழ்வு அவன் உலக நோக்கை வளர்த்தது. துறைமுக நகரத்துக்குப்