உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்ச் செல்வம்

73

பேராசிரியர் சுந்தரனார் தமிழைப் பற்றிக் கூறிய உண்மை வள்ளுவர் குறளுக்கும் பொருந்தும்.

“பல்லுயிரும் பல உலகும்

படைத்தளித்துத் துடைக்கினும் ஓர்

எல்லையறு பரம்பொருள் முன்

இருந்தபடி இருப்பதுபோல்...

ஆரியம் போல உலக வழக்கு அழிந்தொழிந்து சிதையா உன் சீரிளமைத் திறம் வியந்து

செயல் மறந்து வாழ்த்துதுமே!”

என்று தமிழ்பற்றி அவர் பாடினார். அதனைச் சற்று மாற்றி,

"பலநாடும் பலபண்பும்

பலபடவே தான் படைத்து

நிலவுலகில் அவை தழைத்து நில்லாமல் அழிந்திடினும் தனித்தமிழ் முன் இருந்தபடி தனிஎன்றாய் இருப்பது போல் தனித் தமிழன் வள்ளுவனும் அவன் கண்ட பொதுமறையும் மனிதஇனத் தலையூற்றாய் மன்னுலகின் இன்னுயிராய் இனிய பொது அறம் வளர்க்கும் எழில் நலங்கண்டு ஏத்துதுமே'

என்று நாம் வாழ்த்தலாம்.

99

வள்ளுவர் கண்ட உலகத்தைத் தமிழன் தவற விட்டு விட்டான். அதை அவன் திரும்பவும் பெறும் நாள் விரைவில் வர இருக்கிறது. அது தமிழனுக்கு மட்டும் புதுநாள் அல்ல. உலகுக்கே புதுநாளாய் அமையும். ஏனென்றால், அதுவே வருங்காலத் தமிழகம். அதே சமயம் வருங்கால உலகத்தின் புதிய வழிகாட்டி யாகவும் அதுவே இருக்கப் போகிறது!