உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

|– –

அப்பாத்துரையம் – 19

அங்கொன்றும் இங்கொன்றும் காணலாம். ஆனால், இவை வள்ளுவர் கருத்துகளின் சிதறல்கள் மட்டும்தான். அவரிடமிருந்து நேரடியாகவோ சுற்று வழியாகவோ அவை மேற்கொள்ளப் பட்டவை. அவை வள்ளுவர் கண்ட மூலத் தமிழ்ப் பண்பின் கூறுகள் மட்டுமே; அவை கால டங் கடந்த உலகப் பண்புக் கூறுகளாகமாட்டா.

திருவள்ளுவர் காலத்தில் நாகரிக உலகின் மய்ய உயிர்நிலை யாக இருந்தது தமிழகம் ஒன்றுதான். மற்றக் கோளங்களுக்கு வெங்கதிரோன் ஒளி கொடுப்பதுபோல, உலகின் மற்ற எல்லாப் பகுதிகளுக்கும் தமிழகம் பண்பை வழங்கிக்கொண்டிருந்தது.

சமற்கிருதம் அன்று பிறக்கவில்லை. வேதமொழி என்று கூறப்படும் ஆரிய மொழியில் அன்று எழுத்தில்லை. இலக்கணமில்லை. இலக்கியம் என்ற கருத்தின் நிழல்கூட அன்று கிடையாது. சமற்கிருதம் இலக்கியமொழி ஆன காலம் திரு வள்ளுவர்க்குப் பல நூறு ஆண்டுகளுக்குப் பின் - சங்க இலக்கியத் துக்குக்கூடப் பின்னரேயாகும்.

கிரேக்க உரோம இலக்கியங்கள் யூத, எகிப்திய, சால்டிய நாகரிகங்களின் பிள்ளைகள் மட்டுமே. தமிழரிடமிருந்து அவை நேராகப் பெற்ற பண்புகள் சில. தமிழினத்தின் எல்லையிலிருந்து பழைமை இந்தியா, பாரசீகம், எகிப்து, சால்டியா ஆகிய நாகரிகங்கள் வழியாகப் பெற்ற பண்புகள் சில. இந்தத் தொல்பழ நாக ரிகங்களில் மிகவும் பிற்பட்ட நாகரிகங்கள் கிரேக்க நாகரிகமும், இந்திய நாகரிக முமே. இரண்டும் மொழிவகையில், பண்பு வகையில் இன்று மங்கி மறுகிவிட்டன. ஆனால், ஒன்று ஐரோப்பிய நாகரிகமாக ஒளி வீசிற்று. மற்றது இன்றைய புதிய வடஇந்தியத் தாய்மொழிகள் மூலம் புதிய வாழ்வு தேடுகின்றது.

வள்ளுவர் திருக்குறளைவிடப் பழைமையான நூல் உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லை. தமிழில்கூடத் தொல்காப்பியம் ஒன்றுதான் இருக்கிறது. அஃது இவ்வளவு பழைமையான நூலாயிருந்தாலும், இன்று உலகின் மிகப் புதிய நூலாகவும் இருக்கிறது. ஏனென்றால், அன்றைய தமிழகமே இன்றைய உலகின் வித்து. வருங்கால உலகின் கருமூலமும் அதுவே.