உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்ச் செல்வம்

71

வள்ளுவர் பொதுமை, பலவற்றை மேலீடாக அரித்தெடுத்த பொதுமை யன்று. தமிழையும் பிற மொழிகளையும் ஒப்பிட்டு அவர் பொதுமை காணவில்லை. தமிழை ஆழ்ந்து கற்றே அப்பொதுமை கண்டார். தமிழகத்துடன் பிறநாடுகளும் சுற்றிப் பார்த்து அறிந்து அவர் உலகப் பொதுமை காணவில்லை. தமிழகத்திலிருந்து கொண்டுதான் அப் பொதுமையைப் படைத்தார். தமிழ்ப் பண்புடன் வேறு எந்தப் பண்பையும் ஒப்பிட்டுப் பார்த்து அவர் பொதுமை நிறுவவில்லை. தமிழ்ப் பண்பையே அப் பொதுமைப் பண்பாக்கிக் காட்டினார்.

வள்ளுவர்க்குத் தமிழ்ப் பண்பே மனிதப் பண்பாயிருந்தது. ஏனென்றால், அவர் நாளில் அதனுடன் போட்டியிடும் பண்பு இல்லை. தமிழர் கண்ட பண்பு தமிழகத்தில் அன்று உச்சநிலையில் இருந்தது, உலகமெங்கும் அதுவே சிறுகச் சிறுகப் பரந்து பண்புடைய உலகை வளர்த்தது.

வள்ளுவர் காலத்தில், அதற்கு நெடுநாள் முற்பட்டே, தமிழகம் உருவாயிருந்தது. ஆனால், தமிழகத்திலும் அன்று வேற்றினமே இல்லை. தமிழகம் கடந்துகூட வேற்றினம் இல்லை. தமிழினம்தான் இருந்தது. ஆனால், தமிழ்ப் பண்பு நிறைந்த பகுதியையே அக் காலத்தவர்கள் தமிழகம் அல்லது செந்தமிழ் நாடு என்றார்கள். 'தமிழ் கூறும் நல் உலகு' என்று

தொல்காப்பியப் பாயிரம் கூறுவது இதையே. தமிழ்ப் பண்பு சிறிது குறைந்த பகுதிகளுடன் தமிழகத்தைச் சேர்த்து அவர்கள் தமிழுலகம் என்று அழைத்தனர். தமிழ்ப் பண்பு உலகெங்கும் அன்று படிப்படியாகப் பரவிக்கொண்டிருந்தது. இதனால்தான் திருவள்ளுவர் கண்ட தமிழ்ப் பண்பு உலகப் பண்பாய் அன்று நிலவிற்று. இன்றைய உலகப் பண்பு பேரளவில் திருவள்ளுவர் கண்ட தமிழ்ப் பண்பின் வளர்ச்சிதான். அது காலம் இடம் கடந்து நிலவுவதன் மறை இரகசியம் இதுவே.

திருவள்ளுவர் கருத்துகளில் ஆழத்தைத் தூய்மையை - திட்டத்தை நாம் வேறு எந்த மொழியிலும் காண முடியாது. தமிழில்கூட வேறு எந்த நூலிலும் அதை முழுமையாகக் காண்பதற்கில்லை. ஆனால், அதன் பரப்பை - பரப்பின் ஒரு பகுதியை - தமிழிலக்கியம் முழுவதும் காணலாம். சமற்கிருதத்தில் பாரதத்திலும், புராணங்களிலும் சுமிருதிகளிலும்கூட