உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

||---

அப்பாத்துரையம் - 19

உரோமர் வரலாற்றிலே முடியாட்சிக் காலம் அதன் பேரரசுக் காலமே (கி.மு.1 முதல் கி.பி.5ஆம் நூற்றாண்டுவரை) யாகும். குடியாட்சி முறைகளை அழித்துத் தான் மாவீரன் ஜூலியஸ் சீசர் முடியாட்சியை நிறுவினான். உரோம் நாகரிகம் உச்சநிலையடைந்து உலக நாகரிகத்துக்கு வழிகாட்டியாயிருந்த காலம் (கி.மு.5ஆம் நூற்றாண்டில்) ஒரு கொடுங்கோலரசனை வீழ்த்தியபின்பே குடியாட்சி அமைந்ததாக உரோமரின் இலக்கியப் பழங்கதை மரபுகள் குறிக்கின்றன.

னை

துபோலவே கிரேக்கரின் வரலாற்றிலும் (கி.மு.4ஆம் நூற்றாண்டில்) மாவீரன் அலெக்சாண்டரும் அவன் தந்தை பிலிப்பும் பல கிரேக்கக் குடியரசுகளை அழித்தொழித்தபின்தான் பேரரசு பரப்பினர். கிரேக்க நாகரிகம் உச்சநிலையடைந்து மனித நாகரிகத்துக்கு வழி காட்டிய காலம் இதற்கு முற்பட்ட குடியாட்சிக் காலமே (கி.மு.7 முதல் 4ஆம் நூற்றாண்டுவரை) யாகும். ஆனால், இக்காலத் தொடக்கத்துக்குமுன் (கி.மு.7ஆம் நூற்றாண்டுக்கு முன்) அரசர்களே இருந்ததாகக் கிரேக்க இலக்கியப் பழங்கதை மரபுகள் குறிக்கின்றன.

கீழை உலகில் குடியரசுகள்

கீழை உலக வரலாற்றிலும் இலக்கியத்திலும் எங்குமே நாம் முடியரசைப் பற்றித்தான் கேள்விப்படுகிறோம். குடியரசு என்ற பெயர் இலக்கியங்களில் மருந்துக்குக்கூடக்கிடையாது. ஆயினும், தொடக்கக் காலப் புத்த இலக்கிய மரபு மூலமும் வரலாற்று மூலமும் வட இந்தியாவில் (கி.மு.7ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.3ஆம் நூற்றாண்டு வரை) முடியரசுகளுக்கிடையே ஆங்காங்கே குடியரசுகள் நிலவி வந்ததாக அறிகிறோம். தவிர, புத்தர்பிரான் பிறந்த சாக்கியர் குடியும் ஆந்திரப் பேரரசும், மாளவ அரசும் முடியரசுகளல்ல; பல குடியரசுகளின் ணைப்பான கூட்டுக் குடியரசுகளே.

தமிழகத்துக்கு வெளியே உலக வரலாற்றில் குடியரசுகளைப் பற்றி நமக்குக் கிட்டும் செய்திகளைக் கீழ் வருமாறு வகுக்கலாம்.

ஒவ்வோர் இனத்திலும் குடியரசுக் காலமே நாகரிகத்தில் மிக உயர்ந்த காலம். அதற்கு முன்னும் பின்னும் அரசர் ஆட்சிகள் நிலவின.