உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாத்துரையம் - 19

102 ||- பற்றிலிழைந்து இரண்டற்ற ஒன்றற்ற (அத்துவித) நிலை அடையும்போது அவனும் கடவுளாகிறான். சைவர் இதனைச் 'சிவோக' நிலை என்பர். 'சிவமாக்கி என்னை ஆட்கொண்ட' என்று மணிவாசகர் பாடுகின்றார். இக் காரணத்தாலேயே க் கடவுள் பக்தன் இருவர்க்கும் ஒப்பான காதலி, காதலன் இருவரும் தலைவி தலைவர் எனத் தமிழில் குறிக்கப்படுகின்றனர்.

டவுளைக் காதலிக்கும் பக்தனைக் காதலனுக்கும் ம் ஒப்பாக்கியவர் மாணிக்கவாசகரும் முசுலிம் ஞானிகளு ம் மட்டுமேயாவர். வைணவரும், கிறித்துவரும் பிறரும் கடவுளைக் காதலனாக்கி பக்தனைக் காதலியாக்கினர். வள்ளுவப் பண்பில் இழைந்து நோக்கினால் முன்னதே வள்ளுவர் குறிப்பு என்றும், அதுவே மிகவும் நுண்ணயமும் பொருத்தமும் உடையதென்றும் தெரியவரும்.

காதலன் காதலியை நாடுகிறான். அவன் இருந்த இடத்தி லிருந்து அவளிடம் உள்ளம் மட்டும் இழையவிடுகிறான்.

காதலன் உணர்ச்சி வசமுடையவன். காதலி அறிவுடன் அதை அடக்கிக் கொண்டு அதன் ஆற்றலில் விஞ்சுகிறாள். கற்புநெறியில் தன் திண்மையை அவனுக்கு அளித்து, 'பெண்வழிச் செல்லா' ஆண்மையை அவனுக்கு அளித்து, உலகில் அவனுக்கு ஏறுபோற் பீடுநடை அளிக்கிறாள். வள்ளுவக் காதல் கவிஞரைப் போலவே, அவரைப் பின்பற்றிப் பக்தரும் இந்நிலைகளை வருணித்தல் காணலாம். உன் கடைக்கண் பண்பைப் பெற்றபின் நாங்கள் ‘ஒருத்தரையும் மதிப்பதில்லை உன்றன் அருளாலே' என்று பாடுகிறது திருப்புகழ்

கூடல் ஆடவன் காதல். ஆண், பெண் ஊடலில் அவனைத் தடுத்தாட் கொண்டு, துன்பம் போல் இன்பம் பெருக்குகிறாள். இந்த ஊடல் நிலையிலேயே 'இரண்டற்ற ஒன்று, ஒன்றற்ற இரண்டு' நிலைகளை மனிதன் பெறுகிறான். கடவுட் பற்றின் உயிர் முகட்டு நிலையும் அதுவே.

காதலில் சிற்றின்பமாகத் தொடங்கிய இன்பம், கடவுட் பற்றில் பேரின்பமாகி, பண்பார்ந்த காதலியின் பால் அணுகிய காதலனின் உண்மைக் காதலில் இனங்கடந்த நீடின்பமும் இன இன்பமும் ஆக மிளிர்கின்றது.