உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்ச் செல்வம்

103

இன்பம், இனிமை, இனம் - இச்சொற்கள் தமிழில் மட்டுமே சொல் தொடர்புடையன. 'இன்பம் இனம் வளர்ப்பது’ இதை வள்ளுவர் குறித்ததுபோல் யாரும் குறிக்கவில்லை. பெண் இன்பத்தைப் பாடிய கவிஞர் எவரும் அதுபோல் பாடவில்லை.

னால், பெண் இன்பம் பாடிய எவரும் நுகர்ந்து பாடாத அளவிலும் வகையிலும் குழந்தை இன்பத்தை அவர் ஒருவரே பாடியுள்ளார். அதுமட்டுமன்று. அது வெறும் இன்பம் அன்று. இன இன்பம் பயனுடைய இன்பம். நீடித்து வளர்ந்து தழைத்துப் பொங்கும் எல்லையிலா இன்பம் தருவது ஆகும். இதனாலேயே, “தம்மில் தம்மக்கள் அறிவுடைமை, மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது”

66

என்று இனமுதல் அறிவின் உச்சி கண்ட வள்ளுவர் வாய் மொழிந்துள்ளார். தம்மினும் அறிவுடைய பிள்ளையைப் பெறாதவர் பிள்ளை பெற்றவராகமாட்டார். உலகில் இசை நாட்டியவராகமாட்டார். இந்த அழகிய கருத்தைக் குறளில் காணலாம். உரையாசிரியர் உரைகளில் காண முடியாது.

பெண் இயற்கைத் தாய், இனத்தாயின் உரு. தம்மில் தம் மக்கள் அறிவுடையார் என்பதை அவள் மதிப்பிட முடிவதில்லை. கல்வியில்லாத இக்காலப் பெண்கள் நிலையினாலென்று உரையாசிரியர் கூறினார். அவர் போலிச் சிற்றறிவுக்கு ஏற்றபடி. உண்மை என்னவெனில் அன்பு மிகுதி காரணமாகவே, தாய் தன் மதிப்பீட்டில் உறுதி கொள்வதில்லை. அதனை உலகமொப்பிய சான்றோர் ஒப்புதல் 'கேட்டு' அகமகிழ்வதாக, அவர் குறிக்கிறார். “ஈன்றபொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்”

இம் மகிழ்ச்சியை வள்ளுவர் தந்தைக்கு அளிக்கவில்லை. ஏனெனில், தந்தை இவ்வளவு கைம்மாறு கருதாத மகிழ்வுணர்ச்சி யுடையவனன்று. அவன் கடமையாற்றிப் பெருமையும் புகழும் கொள்கிறான். தாயாகிய பெண்ணோ, இன உணர்வில் மகிழ்கிறாள். அவளே இன இன்ப வடிவினள், இன அறிவின் சிகரம், இனப் பண்பின் உயர்தளமாதலால்!