உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48-

அப்பாத்துரையம் – 19

தொண்டடைமான் கலிங்க அரசனைக் காடு மேடெல்லாம் தேடிக் குகை யில் கண்டுபிடித்து அரசன்முன் கொண்டு வந்தான். சோழன் அவன் முடிமீது அடிவைத்து அவனுக்கு அடைக்கலம் தந்தான்.

“கடற் கலிங்க மெறிந்து

செயத் தம்பம் நாட்டிக் கடகரியும் குவிதனமும் கவர்ந்து தெய்வச்

சுடர்ப் படைவாள்

அபயன் அடி அருளினோடும் சூடினான் வண்டையர் கோன் தொண்டை மானே!”

கலிங்க நாடு சிறிய நாடன்று. ஒருகால் இமய முதல் பாலாறு வரை ஆண்ட நாடு. வீரம் செறிந்த நாடு. அது மட்டுமன்று. கடல் வாணிகமும் கடற்படையும் நிறைந்த நாடு. கலை மலிந்த நாடு. எதிரியாயினும் இப் பெருமைகளைத் தமிழ்க் கவிஞர் செயங்கொண்டார் சுட்டிப் போகும் கவிநயம் கலந்த வரலாற்று வாய்மை இக்காலக் கவிஞர்களால்கூடப் போற்றிப் பின்பற்றத்தக்கது எனலாம். பேய்கள் வாழ்த்துவதாக ஆறாவது கடைசிப் பகுதியில் சோழனைப் பாடிக் கவிஞர் நூலை முடிக்கிறார்.

66

“மன்னர் புரந்தர வாள் அபயன் வாரணம் இங்கு மதம் படவே, தென்னர் உடைந்தமை பாடீரே;

சேரர் உடைந்தமை பாடீரே!

எற்றைப் பகலும் வெள்ளணி நாள் இருநிலப் பாவை தன்கீழ் நிழற்றும் கொற்றக் குடையைப் பாடீரே!