உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்ச் செல்வம்

ஓட அஞ்சினர், அருவர் வருவர் எனா இறைஞ்சினர்,

அபயம் அபயம் எனா நடுங்கியே!’

99

47

அருவர் என்பது இன்றும் தெலுங்கில் தமிழரைக் குறித்த பெயர். ஆகவே, அன்று கலிங்கத்தில் பேசப்பட்ட திராவிட மொழியாகிய தெலுங்கு மொழியிலேயே அருவர் வருவர் அதாவது, தமிழர் வந்து விடுவார்கள் என்று கண்ட கண்ட டமெல்லாம் அஞ்சி ஓடினார்களாம்!

இ L

அகப்பட்ட கலிங்கர் கூறும் கூற்றுகளில் கவிஞர் நகைச்சுவையின் எல்லை காட்டுகிறார்.

ஆடைகளை எறிந்துவிட்டு; நாங்கள் கலிங்கர் அல்லர் (கலிங்கம் என்றால் ஆடை); நாங்கள் அமணர்கள்! (1.சமணர் 2. வேட்டியில்லாதவர்) என்றார் சிலர்.

வில் நாணை மூன்றாக முறுக்கிப் பூணூல் போல் போட்டுக்கொண்டு சிலர் 'நாங்கள் இந்த நாட்டினர் அல்லர்; பார்ப்பனர்கள். கங்கையில் நீராடிவிட்டுச் செல்கிறோம்' என்றனராம்.

குருதியில் ஆடை துவைத்து, அதைக் காவி ஆடையாக உடுத்து, 'நாங்கள் புத்தத் துறவிகள்!' என்றனராம் சிலர்.

சிலர் இன்னும் திறமைசாலிகள். தமிழர் பாணர்களைத் தாக்கமாட்டார்கள். ஆகவே, யானைக் கழுத்தில் உள்ள மணியைக் கையில் பிடித்துக்கொண்டு, 'நாங்கள் தெலுங்கு நாட்டுப் பாணர்கள் (சித்தேசிகள்); கலிங்கக்களம் பாட வந்தோம். ஆனால், எங்கள் தோல்வி கண்டு திகைத்து நிற்கிறோம்' என்றார்களாம்!

கலிங்கநாடு ஓவியக் கலைக்குப் பெயர் போனது. கவிஞர் இதை இவ்விடத்தில் சுட்டிக் காட்டுகிறார். கலிங்க ஓவியர் எழுதிய சித்திர உருவம் தவிர அந்த நாட்டில் பிழைத்தவர்கள், காயம் படாதவர்கள் இல்லை என்று கம்ப சூத்திரமாகக் கூறி அவர் போர் வரலாறு முடிக்கிறார்.