உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

மத்தவர், மத்திரர்,

மாளுவர், மாகதர், மச்சர், மிலேச்சர்களே:

குத்தர், குளத்தர், வடக்கர், துருக்கர்,

குருக்கர், வியத்தர்களே!”

அப்பாத்துரையம் - 19

எத் னை சிற்றரசர் பெயர்கள்! ஆனால், ஒரு பெயர் இல்லை, அதுதான் கலிங்க அரசன் பெயர். அதைக் கேட்டதும் குலோத்துங்க சோழன் கோபாவேசங் கொள்கின்றான். தானே போருக்குப் புறப்பட எழுகிறான்.

அமைச்சனும் தளபதியுமான வண்டையர்கோமான் கருணாகரத் தொண்டைமான், 'இந்தச் சிறு பகைவனை எதிர்க்கத் தாங்கள் போகக்கூடாது. இதோ நொடியில் சென்று, வென்று கொண்டு வருகிறேன் அவன் தலையை' என்றான்.

அரசன் கோபம் ஒரு சிறிது தணிந்தது, தற்காலிகமாக. கருணாகரன் படையுடன் புறப்பட்டான்.

ஐந்தாம் பகுதியின் பரணிப் போர்தான் நூலின் நடுப் பகுதி. கம்பர் இதைப் படித்திருந்தால், யுத்தகாண்டத்தை இன்னும் சிறப்பாகப் பாடியிருப்பார் என்று கூறும் முறையில் போர் வீரரின் வீர உணர்ச்சியுடனும் வீரதீர ஒசையுடனும் பாடப் பட்டிருக்கிறது இப்பகுதி.

மதில்கள் இடிந்தன; வீடுகள் எரிந்தன; புகைத் திரள் எழுந்தது; அடவிகள் பொடிபட்டன; அருவிகள் அனல்பட்டன; மலைகள் தூள்பட்டன.

அரண்களைக் காணவில்லை. அரணாவார் யாருமில்லை. கலிங்கமக்கள் ஓடினர். கலிங்க மன்னன் மலையேறி ஒரு குகையில் ஒளிந்து கொண்டான்.

66

“கலிங்க வீரர்,

ஒருவர் ஒருவரின் ஓட முந்தினர்!

உடலின் இழிவினை