உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்ச் செல்வம்

45

இத்தனையும் குலோத்துங்கன் பிறந்த அன்றே நடந்ததாய்க் கவிஞர் மனக்கண்ணில் கண்டு கூறிவிடுகிறார்! இது புராண இதிகாச பாணியே ஆனாலும் கூறுவது இங்கே புராணம் அல்ல, வரலாறு!

குலோத்துங்கன் ஆட்சியில் சோழ நாட்டின் சிறப்புப்

பாடப்படுகிறது.

“எங்குமுள மென்கதலி! எங்குமுள தண்கமுகம்!

எங்குமுள பொங்கும் இளநீர்!”

ஆயினும் போரில்லாமல் மன்னன் தோள்கள் தினவெடுக் கின்றன. வெளிநாட்டு அரசர் திறையைக் கொண்டுவந்ததாக அமைச்சர் வந்து கூறுகிறார். திறை கொணர்ந்த அரசர் பெயர்களைக் கவிஞர் கூற்றிலேயே காணலாம்.

“தென்னவர், வில்லவர், கூபகர், சாபகர்,

சேதிபர், யாதவரே;

கன்னடர், பல்லவர்,

கைதவர், காடவர்,

காரிபர், கோசலரே;

கங்கர், கராளர்,

கவிந்தர், துமிந்தர்,

கடம்பர், துளும்பர்களே;

வங்கர், இலாடர்

மராடர், விராடர்,

மயிந்தர், சயிந்தர்களே;

சிங்களர், வங்களர்,

சேகுணர், சேவணர்.

செய்ய வரையணரே;

கொங்கணர், கொங்கர்,

குலுங்கர், சௌந்தியர், குச்சரர், கச்சியரே;