உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கவியரசனைப் பாடிய புவியரசன்

தமிழிலக்கிய வரலாற்றிலே நாம் சென்ற இரண்டாயிர ஆ ண்டுக் காலமாகத் தமிழகம் அடைந்து வந்த வளர்ச்சி, தளர்ச்சிகளைக் காண்கிறோம். இந்த இரண்டாயிர ஆண்டு களிலே நமக்கு இரண்டு பொற்காலச் சித்திரங்கள் கிடைக்கின்றன. ஒன்று, சங்ககாலம் -ஏறத்தாழ கி.பி.2ஆம் நூற்றாண்டுக்கு உரிய காலம். மற்றது, அதற்கு ஆயிர ஆண்டு பிற்பட்ட, நமது காலத்துக்கு ஓர் ஆயிர ஆண்டு முற்பட்ட சோழர் காலம். கவிச் சக்கரவர்த்திகளாகச் சயங்கொண்டாரும் ஒட்டக்கூத்தரும் வாழ்ந்த காலம். இந்த ஆயிர ஆண்டுகளிலும் தமிழகத்தின் அடிப்படைப் பண்பில் பெரு மாறுபாடு ஏற்படவில்லை. ஓரளவு வளர்ச்சிகூட ஏற்பட்டிருந்தது.ஏனெனில், இரண்டு காலத்திலும் அரசரைப் புலவர் பாடினர். ஆனால், சங்ககாலப் புலவர் முடியரசரையும் குடியரசரையும் ஒரே பாடலாகப் பாடினர். ஏனெனில், அவர்கள் பாடியது அரசரையல்ல-அரசை-அரசுப் பண்பை! சோழர் காலத்திலோ பாடிய கவிஞர் தொகை குறைவு. ஆனால், அவர்கள் கவிச்சக்கரவர்த்திகள்! அவர்களால் பாடப்பட்டவர்களும் குடியரசரல்லர், முடியரசரல்லர்-தமிழக முழவதும் மட்டுமன்றி அந்நாளைய நாகரிக உலகம் முழுவதுமே ஆண்ட புவிச்சக்கரவர்த்திகள்.

ஆயிரம் ஆண்டுகளில் கவிஞரின் பட்டியலில் எவ்வளவோ பேர் உயிர் நீத்துவிட்டனர். அரசரும் அப்படியே. ஆனால், கவிஞர் தொகையில்-கவிஞர் அரசர் பண்பாட்டில்-சிலவற்றுள் படிப்படியான தேசத்தின் குடியாட்சிப் பண்பில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்படாமல் இல்லை. ஒட்டக்கூத்தர், சயங்கொண்டார், மாபெரும் கவிஞர்கள்தாம்-ஆனால், அவர்கள் தனிவிரும் பாறைகள்.