உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

107

கியுள்ளது. இது காரணமாக அவர் தான் தன்னை எவ்வளவு பசப்புக்காரி என்று நினைத்துக் கொள்ளமாட்டார்? இவ்வெண்ணங்களுடன் அவர் காதலை ஏற்கும் சுதந்தரம் தனக்கில்லையே என்று அவள் துடிதுடித்தாள். இது அவன் மீது அவள் பாசத்தை முன்னிலும் பன்மடங்காக வளர்க்கவே உதவிற்று. ஆனால், இச்சமயம் திடுமென அவள் சூழ்நிலை அவள் நெஞ்சில் மின்னல் போல் பாய்ந்து வந்தது. அந்தோ, அவள் வாழ்வின் பகடை என்றென்றைக்குமாக ஒரு நிலையில் தூக்கி எறியப்பட்டு விட்டது. இப்போது அவள் பெண்ணல்ல, மனைவி - ஒருவர் மனைவி! இப்போது இவ்வெண்ணங்களை எண்ணுவதிலேயே பொருளில்லை என்று அவள் கண்டாள். அவற்றை மூளையில் புகவிடுவதேயில்லை என்று மீண்டும் துணிவு கொண்டாள்.

தன் இளந்தூதன் எப்படித்தான் காரியத்தை வெற்றி கரமாகச் சாதிப்பானோ என்ற கவலையுடன், கெஞ்சி படுக்கையில் கிடந்து புரண்டான். கடைசியில் பதில் வந்தது. அவன் திடுக்கிட்டான். அதன் உணர்ச்சியற்ற கடுமை கண்டு அவன் திகைத்தான். பின் பெருத்த ஏமாற்றத்துடன் வாய் விட்டுக் கதறினான். 'இது மிக மிக மோசம், மிக மிகக் கொடுமை!' என்று கூறிப் படுக்கையில் சாய்ந்து விழுந்தான். வேதனையால் அவன் முகம் கோரமாகத் தோற்றிற்று. சிறிது நேரம் பேசாமல் இருந்த பின் பெரு மூச்சுடன் எழுந்தான். தன் உணர்ச்சிகளை ஒரு பாடலாகக் கொட்டினான்.

'சோனோச் சமவெளியில் வளர்கின்ற முள்மரம் மாய மரமென் றறியாது நிழல்தேடிப்

பாதை தவறிப் பரிதவிக்கின் றேன், அந்தோ!'

என்று புலம்பினான்.

உத்சுசேமி இன்னும் உறங்கவில்லை. மேற்குறிப்பிட்ட பாடலையும் செய்தியையும் பெற்று அவள் ஓர் எதிர் பாடல் அனுப்பினாள்.

‘புறம்போக் கிடங்களிலே பொல்லா நாடோடியாய்

வறண்ட இவ் வாழ்வில் திரிவேன். அம்மாய

மரம்போல் அணுகும் வழிப்போக்கர் கண்முன் சுருண்டு மடிந்து சுருங்கும் வளம் எனதே'