உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




118

அப்பாத்துரையம் - 22

மற்றவள். உணர்ச்சிகளில் மிதந்தவள். அவற்றில் உறுதி காணாதவள். எனவே இவ்வளவு திடீர்வருகை கூட அவள் அமைதியை மிகுதி குலைத்து விடவில்லை.

தான் அவளைப் பார்க்க வரவில்லை என்று விளக்கம் தரவே கெஞ்சி முதலில் எண்ணினான். ஆனால் அவ்வாறு செய்தால், உத்சுசேமி இவ்வளவு அரும்பாடு பட்டுக் காக்கும் இரகசியம் ஒரு நொடியில் வெளிப்பட்டுவிடும். ஆகவே வேறுவழியில்லை. அவளுக்காகவே வந்ததாக நடிக்க முற்பட்டான். அந்த மனையின் பக்கம் அவன் அடிக்கடி வருவது அவளுக்குத் தெரிந்திருந்தது. அவளைச் சந்திக்கவே இவ்வாறு அரும்பாடு பட்டதாக அவள் எண்ணும்படி விட்டுவிட்டான். இத்தகைய கதையைக் கேட்டால் அதில் துளியளவு உண்மையும் இருக்கக்கூடும் என்று எவரும் எண்ணமாட்டார்கள். ஆனால் எவ்வளவு பொருந்தாப் பொய்யானாலும் அவன் அழகிலும் பெருமையிலும் சொக்கிய அவ்வணங்கு அதை அப்படியே நம்பி விழுங்கினான்.

அவளிடம் அவனுக்கு வெறுப்புக்கிடையாது. ஆனால் அன்று அவன் எண்ணமெல்லாம் மாயமாக மறைந்து விட்ட மற்ற அணங்கு பற்றியதாகவே இருந்தது. அவள் அவனை எக்கச்சக்கமான நிலையில் மாட்டி விட்டு மறைந்துவிட்டாள். அதுபற்றித் தற்போது எங்கோ ஓரிடத்தில் பதுங்கியிருந்து தன்னைப் பாராட்டி மகிழ்ந்து கொண்டிருப்பாள் என்பதில் சந்தேகமில்லை. 'உலகிலேயே அவளை ஒத்த பிடிவாத முடைய பெண் இருக்க முடியாது. அப்படிப்பட்டவளை நாடி பின்தொடர்ந்து செல்வதில் என்ன பயன்?' என்று அவன் தனக்குள்ளே கூறிக் கொண்டான். ஆயினும்இவ்வளவும் அறிந்த பின்னும் அவன் இதயத்தில் அவள் நினைவே நிரம்பியிருந்தது.

அவன் முன்னிருந்த பெண்மணிக்கு இளமை இருந்தது. கவர்ச்சி இருந்தது. களியாட்டத் துடிப்பு இருந்தது. விரைவில்

இருவரும் ஒருவருடன் ஒருவர் எளிதில் பழகினர்,

கூடிக்குலவினர்.

'நன்கு தெரிந்த ஒருவரைச் சந்திப்பதை விட இப்படித் திடுமெனச் சந்தித்துப் பழகுவதில் எவ்வளவு இன்பம் இருக்கிறது?' என்று கெஞ்சி பேச்சைத் தொடங்கினான். பேச்சிறுதியில் அவன்