உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

119

மேலும் தொடர்ந்தான்: 'நான் ஒன்று கூற விரும்புகிறேன், தவறாக எடுத்துக் கொள்ளாதே!' நம் சந்திப்பு இன்னும் சில நாட்களுக்காவது இரகசியமாய் இருக்க வேண்டும். நான் விரும்புகிறபடி எப்போதும் நடப்பதற்கு என் நிலை இடந்தரவில்லை. அத்துடன் உன் உறவினரும் இதைப்பற்றிக் கேள்விப்பட்டால் நம்மிடையே தலையிட்டுத் தொல்லைகள் விளைவிக்கக் கூடும். ஆகவே பொறுமையுடன் என்னைமறந்து விடாதே? என்று பேசினான்.

இரு

ரு.

அவாத்துடிப்பற்ற இந்த அறிவுரைப் பண்பு அவளுக்கு மன நிறைவு அளிக்கவில்லை. அவள் மறு மொழியில் சிறிது ஏமாற்றம் தொனித்தது. ' அப்படியானால் நான் உங்களுக்குக் கடிதங்கள் கூட எழுதப்படாதா?' அதைக்கூட மக்கள் தவறாகக் கருதி விடுவார்களா?' என்று கேட்டாள். அவன் பதில் அரைகுறைத் தேறுதல் அளிப்பதாய் இருந்தது. 'அப்படியொன்றுமில்லை'. மறைப்பு என்பது மக்கள் பட்டாங்கமாக அறிந்து விடப்படாது என்பதுதான். அவ்வப்போது என் பணியிலுள்ள சிறுவன் நம்மிடையே கடிதங்கள் கொண்டேகக் கூடாதென்றில்லை. ஆனால் இதற்கிடையில், வெளியார் யாரிடமும் இதுபற்றிச் சொல்லாடி விடாதே' என்றான் அவன்.

உத்சுசேமி அறையை விட்டு ஓடிய சமயம் அவள் கைச்சதுக்கம் ஒன்று தோளிலிருந்து நழுவி விழுந்திருந்தது. கெஞ்சி உத்சுசேமியின் தோழியை விட்டுப் பிரியும் சமயம், அது அவன் கண்களில் பட்டது. அதை அவன் ஆவலுடன் எடுத்து வைத்துக் கொண்டான்.

சிறுவன் அருகாமையிலேயே படுத்திருந்தான். கெஞ்சி அவனை மெல்ல விழிப்பூட்டினான். தன் தலைவர் தன்னை எந்த நேரம் அழைப்பாரோ என்ற எண்ணத்தினால் அவன் அரைத் தூக்கமே தூங்கியிருந்தான், அவர்கள் வெளி வரும் போது 'யாரது?' என்று ஒரு குரல் கேட்டது. அது மனையில் வேலை பார்த்த ஒரு கிழவியே. சிறுவனுக்கு ஒரு சிறிது கலக்கம் ஏற்பட்டது. அதைக் காட்டிக் கொள்ளாமல் 'நான்தான்' என்று பதிலளித்தான். 'இந்நேரத்தில் நீ இங்கே எதற்காக இப்படி நடமாடுகிறாய்?' என்று கடிந்த வண்ணம் அவன் கதவை நோக்கியே முன்னேறினாள்.