உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

131

இங்கே குறிப்பிட்ட அரண்மனை இளைஞருள் ஒருவரே விசிறியிலுள்ள பாடலை எழுதியிருக்க வேண்டும் என்று கெஞ்சி எண்ணினான். அதில் தொனித்த தன்னிறைவமைதியை நோக்க, அதை எழுதியவன் அத்தகைய தற்பெருமைக்குரிய உயர் பதவியாளனாகவே இருக்க வேண்டும். ஆயினும் கெஞ்சி இச்சமயம் காதற் புதுமை யார்வத்தில் மிதந்து கொண்டிருந்தான். ஒருவேளை இப்பாடல் தன்னை அறிந்த ஒருவரால் தன்னை நோக்கியே எழுதப்பட்டிருக்கக் கூடும் என்ற இனிய கற்பனையை விலக்குவது அவனுக்கு அரிதாயிற்று. ஆகவே அவன் தானும் தன் கையெழுத்தை மாற்றிக் கொண்டு ஒரு தாளில் எழுதினான்.

'மாலை அரை அருளில் நான் மங்கலாகக் கண்ட அம்மலர்கள் மேலும் அணுகி நுணுகி நான் நோக்கி யிருந்தேனானால் சிறிதும் கருத்தில் குழப்பம் அளித்திருக்க மாட்டா!’

எழுதிய தாளை மடித்து அதைத் தன் வேலையாளிடம் கொடுத்து அனுப்பி விசிறி தந்தவர்களிடம் கொடுக்கும் படி கூறினான்.

விசிறியை அனுப்பியவர்கள் கெஞ்சியை முன்பின் பார்த்தறியாதவர்கள் ஆகலாம். ஆனால் அவன் முகத்தோற்றம் நன்கு அறியப்பட்ட ஒன்று. ஆகவே அவர்கள் பலகணி வழியாக அவனைக் கண்டபோதே அவனைச் சரியாக ஊகித் துணர்ந்திருக்கக் கூடும் என்று அவ்வேலையாள் நினைத் த் திருந்தான். விசிறியை அனுப்பும் சமயம் அவர்களுக்கிருந்த விதிர் விதிர்ப்பார்வத்தையும் அதற்குரிய விடை நெடுநேரம் வராதிருந்தது பற்றி அவர்கள் அடைந்த ஏக்க ஏமாற்றத்தையும் அவனால் கற்பனைப் படுத்திக் காண முடிந்தது. வேண்டுமென்றே நாகரிக நயமுறைகட்கு மாறாகக் காலம் தாழ்த்திய ஒன்றாக இக்கடிதத்தின் தாமதத்தை அவர்கள் கருதிக் கொள்ளக் கூடும். இவ்வாறு நினைத்த வேலையாள் மனையை அணுகவே கூச்சமடைந்தான்.

இதற்கிடையில், மங்கலான பரந்த ஒளியின் துணை கொண்டு, கெஞ்சி மெள்ளத் தன் செவிலித் தாயின் மனையிலிருந்து புறப்பட்டுச் சென்றான். அடுத்த மனையின்