உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




134

அப்பாத்துரையம் - 22

அன்று மழை நாளிரவில் நண்பர்கள் உளங்கொண்ட நிகழ்ச்சிகளில் ஒன்றைப் போன்றதே இது என்று கெஞ்சி கருதினான் - புறச் சூழல்களால் கடை வகுப்புக்குத் தள்ளப்பட்டு விட்ட சீமாட்டிகளுள் இவளும் ஒருத்தி. அத்தகையவர்கள் கடை வகுப்பினரைப் போலவே புறக்கணிக்கத்தக்கவர்கள் என்று நண்பர்கள் கருதி யிருந்தனர். புறக்கணிக்கத் தகாத பண்புகள் அவளிடத்திலிருந்தாலும் அவள் கவனத்துக்குப் புறம்பானவளே என்று அவர்கள் முடிவு செய்திருந்தனர்.

இது நிற்க. கோரெமிட்சு திரும்பி வரும்வரை கெஞ்சியின் அகவாழ்வில் உத்சுசேமி திரும்பி வரும் வரை கெஞ்சியின் அகவாழ்வில் உத்சுசேமி கொண்ட பாசத் தொடர்பில் கருத்துச் செலுத்துவோம்.

பெண்டிர் வன்கண்மை மற்ற மக்களைப் பாதிப்பது போல உத்சுசேமியின் வன்கண்மை கெஞ்சியைப் பாதிக்கவில்லை. அவன் விருப்பத்துக்கு அவள் ஆதரவளித்து ஊக்கி யிருந்தால், அவன் அவள் தொடர்பை விரைவில் உணர்ச்சி வசமான தன் பயங்கரச் சறுக்கல்களில் ஒன்றாகக் கருதி எப்பாடுபட்டும் அதை அகற்றவே முற்பட்டிருப்பான். ஆனால் அவள் வகையில் அவன் அடைந்த தோல்வியே, அவள் எண்ணத்தை ஓயாது அவன் உள்ளத்தில் உரமிட்டு வளர்த்தது. அவள் உறுதியைக் குலைக்கப் புதுப்புது திட்டங்களிடும்படி அது அவனை ஓயாது தூண்டிற்று.

செவிலித் தாயைக் காணச் செல்லும் நாள் வரை அவன் பொது மக்கள் வகுப்பில் யாரைப் பற்றியும் மிகுதி கருத்துச் செலுத்தியதில்லை. ஆனால் மழை நாள் உரையாடலின் பின்னும், அந்நாள் முதலும் அவன் எல்லா வகுப்பினரிடையிலும் - சிறப்பாக அவனால் நன்கு பழகியறியப்படாதிருந்த எல்லா வகுப்பினரிடையிலும் மறைந்து கிடக்கும் மனிதப் பண்புகளைத் துருவித் தேடினான். எட்டாதவை, கிட்டாதவை, தகாதவை என்று அவன் நண்பர்கள் ஒதுக்கியவற்றையும் விடாமல் ஆராய முற்பட்டான். தன் வாழ்க்கையில் தானாக வந்து பேரளவில் புகுந்ததாக அவன் கருதிய அணங்கைப் பற்றிக்கூட அவன் அடிக்கடி ஆலோசித்தான். எவ்வளவு தெளிந்த நம்பிக்கையுடன் தனக்காகக் காத்திருப்பதாக அவள் அமைதியுடன் கூறினாள்!