உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

135

அவள் நிலை பற்றி அவன் மிகவும் வருந்தினான். ஆனால் அவளுக்கு எழுதினால், எப்படியாவது உத்சுசேமி அதைக் கண்டு பிடித்துவிடக்கூடும். அது அவளைத் தான் என்றும் அடைய முடியாதபடி செய்துவிடும். ஆகவே அவன் எழுதத் தயங்கினான். பின்னாடி எழுதலாம். பின்னாடி என்றேனும் ஒரு நாள்...’

அவன் எண்ண அலை திடுமென முறிவுற நேர்ந்தது.

திடுமென இச்சமயம் இயோ நோ சுகேயே கெஞ்சியைக் காண வந்தான். தன் மாகாணத்திலிருந்து அவன் இப்போதுதான் திரும்பியிருந்தான். திரும்பியதும் இளவரசனைக் காண விரைந்து வந்தான்.படகில் நெடுந்தொலைப் பயணம் செய்ததனால் அவன் முகம் களைப்புற்றும் கருமை படர்ந்தும் காணப்பட்டது. 'ஐயோ!' இவன் சிறிதும் கவர்ச்சிகரமான தோற்றமுடைய வனல்லன்.மோசமான ஆள்தான்' என்று கெஞ்சி தனக்குள்ளாகக் கூறிக் கொண்டான். ஆயினும் கெஞ்சியால் அவனுடன் இன்று அருவருப்பின்றிப் பேச முடிந்தது. காலத்தாலும் செல்வ நிலையாலும் ஒருவன் எவ்வளவு முறிவுற்றாலும், அவன் நற்குடிப்பண்பும் பயிர்ப்பும் உடையவனாயிருந்தால், கருத்திலும் நடையிலும் என்றும் நயநாகரிகத்தை முற்றிலும் இழந்துவிட முடியாது - முழுவதும் வெறுப்புக்குரியவனாகிவிடவும் முடியாது. இதைக் கெஞ்சி இப்போது கண்டான்.

அவர்கள் இயாவுக்குரிய மாகாணச் செய்திகள் பற்றி வாதித்தனர் -கெஞ்சி அவனுடன் நகையாடி மகிழக் கூட முடிந்தது. இதனால் திடீரென்று அவனுக்கு ஓர் உணர்ச்சிக் குழப்பம் ஏற்பட்டது. பழைய நினைவுகள் இடையே வந்து அவனை ஏன் அப்படிக் கலக்கம் அடையச் செய்ய வேண்டும்? இந்தக் கேள்விக்குக் கெஞ்சி தானே விளக்கம் தந்து தன் உணர்ச்சிக்கும் ஆறுதல் தேடினான். ‘அவன் வயது சென்றவன்தானே - தன் சிறு தவறுதலால் அவளுக்கு என்ன கெடுதல் நேர்ந்துவிடக் கூடு'மென்று எதிர்க்கேள்வி கேட்டு, இந்த மனச் சாட்சியின் குத்தல்கள் கேலிக் குகந்தவை என்றும் கூறிக் கொண்டான்.

அவர்கள் இணைவு தகுதிக் கேடானது. பொருத்தக் கேடானது என்று அவள் நினைத்தது சரியே. உமா நோகமியின் எச்சரிக்கை இப்போது அவனுக்கு நினைவுக்கு வந்தது. அவள்