உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




186

|-

அப்பாத்துரையம் - 22

ஹொக்கெய்டோ குருமாருக்குத் தகுதியான பரிசு தேர்ந்தெடுக்கும் எண்ணத்துடன், கெஞ்சி தன் களஞ்சியத்தைத் துழாவிப் பரிசீலனை செய்தான். அவன் கண்களில் கவர்ச்சிமிக்க ஓர் ஆடை தென்பட்டது. அதை அவன் எடுத்து மடிக்கும் போதே இப்பாடலைப் பாடினான்.

‘கண்ணீருடன் இன்று கட்டுகின்ற வார்க்கச்சை நண்ணும் முடிச்சினை நான் மீட்டும் அவிழ்த்திட ஒண்ணுமோ மேலைப் புது வாழ்வில் யாம் மகிழ?"

இதுவரை (புத்த சமய ஏடுகள் சாற்றுகிறபடி) அவள் ஆன்மா ஆவியுலக இடைவெளியிலேயே உலவியிருந்தது.

ஆனால் இப்போது அவள் தன் புது வாழ்வுப் பாதையில் புறப்பட்டிருக்க வேண்டும். இப்பாதையில் அவள் தற்காப்புக் கோரி அவன் பற்றார்வத்துடன் வணக்க வழிபாடாற்றினான்.

அவன் தோநோ சூஜோவைச் சந்தித்த போது அவன் நெஞ்சு படத்தது.யுகாவின் குழந்தை பற்றியும் அதன் வளர்ப்புக்குரிய தன் திட்டம் பற்றியும் அவன் சூஜோவிடம் கூற வேண்டுமென்று உள்ளூர மிகுந்த ஆவல் கொண்டிருந்தான். ஆனால் கதையின் மீந்த பகுதிகள் அவனைப்பெரிதும் புண்படுத்திச் சீற்றம் கொள்ளச் செய்யும் என்று அவன் அஞ்சினான். கூற விரும்பியதை இதனால் அவன் கூறாமலே விடுத்தான்.

இதனிடையே யுகாவ் மனையின் பணியாட்கள் யுகாவைப் பற்றியோ உகானைப் பற்றியோ கூட எத்தகைய செய்தியும் கிடைக்காதது பற்றி மிகவும் வியப்புற்றனர். அது பற்றிப் பெரிதும் கவலைப்படவும் தொடங்கியிருந்தனர். ஆனால் அவள் காதலன் கெஞ்சியே என்பதற்கான தெளிவுகள் எதுவும் அவர்களுக்குக் கிட்டவில்லை.எனினும் அவர்களில் பலர் அவனை அடையாளம் கண்டு கொண்டதாகக் கருதினர். அவர்களிடையே அவன் பெயர் இரகசியமாகக் காதுக்குக் காது ஓதப்பட்டு வந்தது. கோரெமிட்சு இந்த இரகசியத்தை அறிந்திருக்க வேண்டும் என்றும் கருதப்பட்டது.ஆனால் யுகாவின் காதலனைப் பற்றியே தனக்கு எதுவும் தெரியாதென்று அவன் கை விரித்து விட்டான். இது பற்றிய அவர்கள் கேள்விகளை யெல்லாம் உதறித் தள்ளவும் அவனுக்கு ஒரு நல்ல வாய்ப்புக் கிட்டிற்று. தன்னளவில்