உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

187

முன்போல இன்றும் அந்த மனைக்குப் போய் வந்து கொண்டேயிருந்தான். அவன் அக்கறை கொண்ட செய்தி மனைத்தலைவி பற்றியதன்று என்று இது எல்லாரையும் நம்பவைத்தது. அது பற்றி அவனுக்கு எதுவும் தெரிந்திராததும் இயல்பே என்றும் கருத இடம் தந்தது.

அவர்கள் ஐயப்பாட்டை வேறு திசைக்குத் திருப்புதல் இப்போது எளிதாயிற்று. அணங்கின் காதலன் சூரியோ குடிப்புதல்வனான ஏதோ ஒரு இளங்குறும்பனாகவே இருத்தல் கூடும் என்று அவர்கள் எண்ணினர். தோநோ சூஜோவின் தலையீட்டுக்கு அஞ்சி அவன் அவளைத் தன் மாகாணத்துக்கே இட்டுச் சென்றிருக்கலாம் என்றும் அவர்கள் எண்ணினர்.

மனையின் உண்மை உரிமையாளர் யுகாவின் இரண்டாவது செவிலித்தாயே யாவாள். அவளுக்குச் சொந்தமான புதல்வர் மூவர். உகான் அவர்களுடன் உடன் பிறப்புப் போல இணைந்தே வளர்ந்தாள். அவள் உண்மையில் தம் உடன் பிறந்தாளாய் இருந்திருந்தால் தன்னையும் தன் தலைவியையும் பற்றித் தமக்குக் கட்டாயம் எழுதியிருப்பாள்; உடன் பிறந்தவளல்ல வாதலால் தான் எழுதவில்லை என்று அவர்கள் நினைத்து உளங்கு முறினார்கள். இது அவர்களுக்கு மிகவும் நெஞ்சுறுத்தலாகவும் இருந்தது.

தலைவியின் குழந்தை பற்றிய செய்தி அறிவதற்குக்கூட உகான் அந்த இல்லத்துக்குள் செல்லத் துணியவில்லை. போனால் பல கேள்விகள் சோனாமாரியாகக் கேட்கப்படும் என்று அவளுக்குத் தெரியும். கெஞ்சிக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறாமல் அவற்றுக்குப் பதில் சொல்ல முடியாது. குழந்தை எங்கோ வளரும்படி அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அது பற்றிய நினைவு அவளுக்கு முற்றிலும் மறைந்து போனது பற்றி அவள் வருந்தினாள்.

கனவில் ஒரு தடவையேனும் அணங்கின் முகத்தைப் பார்க்க வேண்டுமென்று கெஞ்சி பெரிதும் ஏக்கமுற்றான்.ஆனால் ஹியே மலையில் நடந்த விழாவடுத்து இரவில் அவன் கண்ட காட்சி அவன் கோரிய காட்சிக்கு நேர்எதிரான இயல்புடைய தாயிருந்தது. அச்சுறுத்தும் நிலையில் முன்னாள் இரவில் காணப்பட்ட பரிதாபத்துக்குரிய அதே பயங்கர அணங்கின்