உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4

||---

அப்பாத்துரையம் - 22

முக்காலத்துக்கும் உரிய உலகப் பேரிலக்கியத் தலை யேடுகளில் ஒன்றாகக் கருதப்படும் இப்பொன்னேட்டுக்குப் பின்னணியா யமைந்த காலத்தின் தன்மை இது.

ஹீயான் மரபுக்காலப்பேரரசின் பேரவையில் பண் போங்கிய உயர் குடிக் கொழுந்துகளான அறிவான்ற ஆடவர், பெண்டிர்க்குக் குறைவு இருந்ததில்லை. கவிதையும் கலையும் அங்கே பேராதரவு பெற்றுப் பேணி வளர்க்கப்பட்டன. அப்பேரவைப் பெருமாட்டிகளிடையே சீமாட்டி முரசாக்கி ஒருவர். மிக்க இளவயதிலேயே அவர் கவிதையிலும் உரை நடையிலும் சிறந்து விளங்கினார். அரண்மனை வாழ்வில் நடைபெற்ற எல்லா நிகழ்ச்சிகளையும் அதன் பெருமக் களிடையே பிறங்கி பிணக்கு சூழ்ச்சி உட்சூழ்ச்சிகள் ஆகிய அனைத்தையும்- அவர் இடைவிடாது கூர்ந்து கவனித்து வந்தார். இக்காட்சி யறிவையும் அதன் உள்ளப் பதிவுகளையும் அடிப்படையாகக் கொண்டுதான் ஒப்புயர்வற்ற நடை நய வனப்புடன் கூடிய இந்தப் பெருந்தகை வண்ணக் கதை எழுந்துள்ளது.

-

சீமாட்டி முரசாக்கி ஜப்பானிய பேரரசியான ஜோதோமோனின் என்பவரிடம் பாங்கியராய் இருந்தவர். இப் பொன்னேட்டை எழுதும்படி அவருக்குக் கட்டளையிட்டவர் - அந் நாளைய பேரரச தலைநகரான 'கியோட்டோ' வுக் கருகாமையில், 'இஷியாமா'த் துறவு மடத்தின் ஆழ்ந்த அமைதியினிடையே சென்று தங்கி இப் பெருங் கலையேட்டை உருவாக்கும்படி இசைவளித்து ஊக்கியவர் அவரே என்று கூறப்படுகிறது. கதையின் சுவடுகள் முழுவதும் முடிவுற்ற ஆண்டு கி.பி.1021 என்று கருதப்படுகிறது. ஆனால், முதற் பகுதியை அவர் கி.பி. 1008 முதலே எழுதத் தொடங்கியிருந்தார். உயர் அறிவுத் திறமும் பண்பாட்டுச் செல்வமும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற ஒரு கலையணங்கின் பத்தாண்டுகளுக்கு மேற்பட்ட பேருழைப்பின் இன்கனியாகப் பிறந்த கலை ஏடு இது.

‘கெஞ்சி கதைகள்' மொத்தத்தில் 54 சுவடிகள் அடங்கியது. அவற்றுள் ஐம்பத்தொரு சுவடிகள் கதை முதல்வனாகிய கெஞ்சி ஹிக்காரு பெருமகன் வாழ்க்கை பற்றியது ஹீயான் பேரரச மாமன்மறத்தின் கலைத் திருவார்ந்த பண்போங்கிய ஒரு