உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

5

பெருமகன் வாழ்விடையே நிகழ்ந்த காதற் சுவையார்ந்த வனப்புமிக்க வீரக் கேளிக்கைகளைத் தீட்டிக் காட்டும் பகுதிகள் இவை. கடைசி மூன்று சுவடிகளும் அப் பெருமகன் மறைவின்பின் அவர் புதல்வன் ஹிக்காரு பெருமகன் வாழ்க்கைக்குரிய ஓவியம்.

தற்போதைய தமிழாக்கம் வண்ணக் கதை முழுவதையும் உள்ளடக்கியதன்று, அதன் ஒரு பகுதியையே உட்கொண்ட தென்று அறிகிறேன். ஆனால், இந்நிலையில்கூட ஓராயிர ஆண்டுகட்குமுன் இயற்றப்பட்ட இந்த ஜப்பானிய கலைப் படைப்பின் சீர்த்திமிக்க நேர்த்தியை வாசகர் எளிதில் காண முடியுமென்றே நம்புகிறேன். இவ்வண்ணக் கதையில் மக்கள் உளங் கவர்ந்த ஓர் இளம் இளம் பெருமகனின் காதல் தேட்டங்களிடையேயும் அதன் மாயப் புயல்களில் சிக்கி மாழ்குறும் வனிதையரின் துயரிடையேயும் ஆசிரியர் வாசகர்களின் கருத்தோட விடுகிறார். அவ்விடங்களில் மனித

நலங்களிலும், ஆடவர் பெண்டிர்க்குரிய மென் தொடர்புகளினால் உருவாகும் நுண்ணயமிக்க உளப்பாட்டுப் பாங்குடைய நல்ல கட்டங்களிலும் ஆசிரியர் கொண்ட உள் நோக்கும் ஒத்துணர்வும் எவ்வளவு சீரியன என்பதைக் கண்டு வாசகர்கள் வியப்பார்வமுறாமலிருக்க முடியாது. அது மட்டுமன்று. அந் நாளைய பழக்க வழக்கங்கள்; சமுதாய மரபுகள் மீது தம் கூரொளி விளக்கம் காட்டி வழுவற மதிப்பிடும் ஆசிரியர் திறம்; அறிவார்ந்த அம் முடிவுரைகளை இலக்கியத் துறைக்குரிய நுண்ணிய நேர்மை தவறாமல் வகுத் துணர்த்தும் அவரது ஆற்றல் ஆகியவை எவரது உள்ளத்தையும் தன் வயப்படுத்தாமலிருக்கமுடியாது.

கதைப் போக்கிலும் மனித வாழ்வின் செயலார்ந்த நிகழ்ச்சிகளின் கூறுபாட்டிலும் அவ்வவற்றை அவ்வவற்றுக்குரிய இசைவார்ந்த இயற்கைப் பின்னணிகளுடன் இணைக்க ஆசிரியர் எங்கும் தவறியதில்லை. வண்ணக் கதை நாடகத்தில் வந்துலவும் பண்புறுப்பினர்கள் நானூற்றுக்குக் குறையாதவர்கள். தென்றல் அலை தவழும் வண்ண மலர்கள், வேனிலின் கூதிர் காலத்தின் செந்தழல் வண்ணப் பொலிவு, கடுங்குளிர் காலத்துக்குரிய பனி படர்ந்த மலைச் சாரல்கள், பள்ளத் தாக்குகளின் வெள்ளொளி