உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6

|---

அப்பாத்துரையம் - 22

வண்ணம் ஆகிய இயற்கையின் பருவக் காட்சி ஓவியங்களே தரப்படுகின்றன.

இந்த அணி நயத்தை ஜப்பானியர் இயற்கையின் பரிவிரக்கம் ('மோனோ -நோ -ஆவாரே') என்பர். புத்தர்பெரு நெறியால் பண்புருவாக்கப் பெற்று ஜப்பானியர் அந்நாளில் ஏற்றமைந்த மெய்ம்மைக் கோட்பாட்டின்படி ‘மனித வாழ்வின் சிறுமை கண்டு இயற்கை கனிவுற்றிரங்கும் காட்சி' என்று இந்த ஜப்பானிச் சொற்றொடரை நாம் தமிழாக்கம் செய்யலாம். ஹீயான் மரபாட்சி யூழியிலும் சரி, அதன் பின்வந்த காலங்களிலும் சரி, ஜப்பானிய இலக்கியப் படைப்புகளின் அடிப்படை பின்னணியாய் அமைந்த கோட்பாடு இதுவேயாகும்.

ஜப்பானிய இலக்கியத்தின் பொன்னேடுகளுள் ஒன்றாகக் 'கெஞ்சி கதைகளை' முதன்மை வாய்ந்த இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் மொழி பெயர்க்கும்படி சாகித்ய அக்காதெமி, தேர்வு செய்துள்ளது கண்டு மகிழ்ச்சி யடைகிறேன். அதற்கு முகப்பு உரை வழங்குமாறு என்னை அழைத்திருப்பது எனக்குப் பெருமை தருவது என்றும் கருதுகிறேன்

இரு நாடுகளிடையே ஒத்துணர்வும் நேச உறவும் வளர்ப்பதற்கு ஒவ்வொரு நாட்டினரின் இலக்கியச் செல்வங்களையும் மற்ற நாட்டினர் கண்டுணருமாறு செய்வதைவிடச் சிறந்த வழி வேறு கிடையாது. இது உறுதி. இவ்வகையில் ஜப்பானிய மொழியில் இந்திய இலக்கியங்களின் தலை சிறந்த படைப்புகளில் சிலபல மொழி பெயர்க்கப் பட்டுள்ளன. ஜப்பானிய மக்களுக்கு அவற்றைப் படித்து நலங் கண்டு மகிழும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இதே முறையில் இந்திய மக்கள் ஜப்பானின் சிறந்த கலைப் படைப்புகளைத் தங்கள் தங்கள் தாய் மொழியாக்கங்களின் மூலமே பெற்று அவற்றின் நலங் கண்டு மகிழும் வாய்ப்பு இதுவரை இல்லாதிருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஜப்பானிய இலக்கிய வரலாற்றிலே முனைத்த முக்கியத்துவம் உடைய இந்த இலக்கியப் படைப்பை இந்தியாவின் கலை முகச் சமுதாயத்தின் முன் கொணரும் அக்காதெமியின் நன் முயற்சியை நான் மனமார வரவேற்கிறேன்.