உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




232

அப்பாத்துரையம் - 22

இச்சமயம் மலையிலுள்ள தன் நண்பர்களைப் பற்றி விசாரித்து நெடுநாளாயிற்றே என்ற எண்ணம் கெஞ்சிக்குத் திடீரென்று தோன்றிற்று. அவன் உடனே ஒரு தனித் தூதனை அங்கே அனுப்பினான். துறவி உடன் தானே மறுமொழி அனுப்பினார். அதன் முடிவில் அவர்தம் உடன் பிறந்தாளாகிய துறவுநங்கையின் சோகமுடிவு பற்றியும் தெரிவித்திருந்தார். 'சென்ற மாதம் இருபதாம் நாளில் இறுதி அணுகிற்று. மனிதஇனத்துக்குரிய பொது நிகழ்ச்சிதான் இது. ஆனாலும் எனக்கு அதன் துயர் பெரிதாகவே உள்ளது' என்று அவர் வருத்தம் தெரிவித்திருந்தார். அதை வாசித்தவுடன் கெஞ்சிக்கும் வாழ்வின் நிலையாமை பற்றியும் சிறுமை பற்றியும் பெருத்த வைராக்கியம் தோன்றிற்று.

மாண்ட அணங்கு - குழந்தையின் எதிர்காலம் பற்றியே அவ்வளவு கவலை காட்டியிருந்தாள். தன் தாயின் மறைவு அவனுக்கு முற்றிலும் நினைவில்லை. ஆனால் அது பற்றிய ஏதோ ஓர் அவல உணர்ச்சி அவன் உள்ளுணர்வில் மிதந்துலவிக் கொண்டிருந்தது. இது அவன் துயர்த் தோழமையுணர்ச்சியை எழுப்பி அக்கடிதத்துக்கு ஆர்வமூட்டிற்று. அதற்கு மறுமொழி எழுதும்போது, அக்கடிதம் பெற்றது குறித்துப் பணி நங்கை சோனகன் சிறிது பெருமை கொள்ளாமலிருக்க முடியவில்லை.

இறுதி வினை முறைகளும் துயர்க் கொண்டாட்டமும் முடிந்தபின் சிறுமி தலைநகருக்குக் கொண்டு வரப்பெற்றாள். இது கேட்டபின் சிலநாள் ஆறவிட்டு, கெஞ்சி தானாக ஒரு அமைதியான இரவில் அங்கே சென்றான். அந்த மனை பாதி பாழடைந்து தனிமையின் நிழல் படர்ந்ததாயிருந்தது. அழிவின் கை அதன் மீது படிந்திருந்தது. அதில் வாழவிருக்கும் சிறுமியின் உள்ளத்தில் அதன் சோகத்தடம் பதிவது நல்லதல்ல என்று அவனுக்குத் தோன்றிற்று. முன்அறிமுகப்படுத்தப்பட்ட அறைக்கே அவன் இட்டுச் செல்லப்பட்டான். இங்கே தேம்பித் தேம்பி அழுத வண்ணம் அழுகையின் இடையிடையே சோனகன் தன் தலைவியின் இறுதிப் பிரிவு பற்றிய முழுவிவரங்களும் எடுத்துரைத்தாள். அது அவனுக்கு மிகவும் உருக்கமாய் இருந்தது. அவள் உள்ளத்தையும் அது ஆட்டி அலைத்தது.

சிறுமி பற்றிப் பேச்சுத் திரும்பிற்று.