உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

233

என் இளந்தலைவியை நான் இயல்பாக அவள்

இளவரசர் பருமானிடமே அனுப்பி

என்

தந்தையாகிய வைத்திருப்பேன். ஆனால் அம்மாளிகையில் அவள் தாய் பட்டபாட்டை என்னால் மறக்க முடியவில்லை. இளந்தலைவி தான் செல்லும் இடத்தின் தன்மையும் மக்கள் உணர்ச்சிகளின் நன்மை தீமைகளும் அறியாத ஒரு கைக் குழந்தையாய் இருந்தால்கூட, அங்கே அனுப்பத் துணிந்திருக்கக்கூடும். ஆனால் இப்போது அவள அந்நிலை கடந்து வளர்ந்துவிட்டாள். அவளை அன்பில்லாது அயவலவராக நடத்தும் சிறுவரிடையே அவள் காலம் தள்ள நேரும். இறுதிநாள்வரை துயருக்காளான அவள் பாட்டியும் இதுதான் கூறிக்கொண்டிருந்தாள். அத்துடன் நீங்கள் அவளிடம் மிகவும் பரிவு காட்டியுள்ளீர்கள். அவள் உங்களிடம் வந்தால், ஒரு சில நாட்களுக்கு மட்டும் வருவதானால்கூட, என் நெஞ்சில் ஒரு பெரும்பளு குறையும். அவள் எதிர்காலத்தைப் பற்றிக்கூட கவலைப்படமாட்டேன். அதுப்பற்றிப் பேசி உங்களுக்குத் தொல்லை தரமாட்டேன். உண்மையில் அவள் நலத்தை உன்னினால், நீங்களே அவளைத் துணைவியாகக் கொள்ளும் அளவு அவள் சிறிது வயதேறியவளா யிருந்தாளில்லையே என்று மட்டும்தான் நான் வருத்த மடைகிறேன். ஆனால் அவள் வளர்ப்புமுறையே அவள் வயதுக்குக் கூடச் சற்று மிகுதியாக அவளுக்குக் குழந்தைப் பண்பு ஊட்டியுள்ளது.' என்றாள்.

கெஞ்சி இடைமறித்தான். ‘அவள் குழந்தை இயல்புபற்றி ஏன் இவ்வளவு ஓயாமல் நினைவூட்டுகிறீர்கள்? அந்தப் பருவமும் துணையின்மையும் தான் என் மனத்தில் அவளைப் பற்றிய

ரக்கப் பாசத்தை உண்டு பண்ணின. ஆயினும் எங்கள் உயிர்களிடையே அதைவிட ஆழ்ந்த பாச இணைப்பு உண்டு என்பதை முற்றும் நான் ஏன் உங்களிடம் ஒளிக்க வேண்டும்? நாம் இப்போது செய்த முடிவை நானே அவளிடம் நேரில் சொல்ல விரும்புகிறேன்.' என்று கூறி அவன் ஒரு பாடலும் பாடினான். அந்தப் பாடலில் அவன் மெல்ல உவமை நயத்துடன் ‘நாணல் வளரும் கரையில் மீளுதற்கே மோதும் அலைபோலத்தான் நான் வந்து வந்து செல்ல வேண்டுமா?' என்று கேட்டான். 'நேரடியாகப் பார்த்தால் அவள் மிகவும் அஞ்சிவிடுவாளா?' என்றும் வினாவினான்.