உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




234

அப்பாத்துரையம் - 22

இல்லை, இல்லை! சிறுமியை நான் வரவழைத்துக் காட்டத்தான் போகிறேன். அவளைக் காணாமலே உங்களைத் திருப்பி அனுப்பப் போகிறேன் என்று உங்களிடம் யார் சொன்னது?' என்றாள் அவள். ஆனால் ‘சிறுமியாகிய நாணல், அலையுடன் மிதந்து சென்றுவிடும் என்று எதிர்பார்க்க முடியாது' என்று அவள் தன் எதிர் பாடலில் கூறியபோது தான் அவன் அவள் உட்கோளை நன்கு உணரமுடிந்தது. அவள் பழகிய சரிசமத் தொனிகூட இப்போது அவனைப் புண்படுத்தவில்லை.

சிறுமிக்காக அவன் காத்துக் கொண்டிருக்கும்போது தனக்குள் மெல்லப் பாடிக்கொண்டிருந்தான். 'மலையது கடக்க இத்தனை மலைப்பு ஏன்' என்ற பாடலே அது. அச்சமயம் பணிப்பெண்டிர் அவன் தோற்றத்தில் ஈடுபட்டு அவனை உற்று நோக்கிக் கொண்டிருந்தனர். அந்த இனிய கணத்தை அவர்கள் தம் வாழ்வில் நெடுநாள் மறக்கவில்லை.

சிறுமி படுக்கையில் கிடந்து பாட்டியை நினைந்து அழுது கொண்டிருந்தாள். பணிப் பெண்களில் ஒருத்தி அவளருகே சென்று, 'நீண்ட போர்வையணிந்த ஒரு பெருமகனார் உன்னுடன் பேசி விளையாட வந்திருக்கிறார். அவர் உன் தந்தை போலிருக்கிறார்' என்று அவளை அழைத்தாள். இது கேட்டதும் அவள் குதித்தெழுந்தாள். 'அம்மா, போர்வையணிந்த பெருமகனாரா! அவர் எங்கே? அவர் தான் என் தந்தையா?” என்று கூறி அறைக்குள் ஓடிவந்தாள். கெஞ்சி புன்முறுவலுடன் அவளை வரவேற்றான். 'இல்லை, உன் தந்தையல்ல நான், ஆனால் உன் அன்பைப் பெற மிகவும் விரும்பும் வேறொருவர். வாம்மா, இப்படி!' என்று அழைத்தான்.

மற்றவர்கள் கெஞ்சி இளவரசனைப்பற்றிப் பேசுவதிலிருந்து அவர் யாரோ மிகப் பெரிய மனிதர் என்று அவள் எண்ணியிருந் தாள். ஆகவே 'போர்வையணிந்த பெருமகனார்' என்று தான் அவரைக் குறிப்பிட்டதுபற்றி அவர் கோபப்படக் கூடும் என்று அவள் அஞ்சினாள். செவிலியிடம் நேரே ஓடி, தனக்கு உறக்கம் வருவதாகக் கூறிப் பாசாங்கு செய்தாள். ‘என்னிடம் நீ இவ்வளவு வெட்கம் கொள்ளக்கூடாது. உனக்கு உறக்கம் வந்தால், என்