உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




34

||-

அப்பாத்துரையம் - 22

மாண்ட பேரரசிக்கிருந்த கவலை இளவரசியின் பணியாளர் களுக்கும் பாதுகாவலருக்கும் ஏற்படாத வகையில் அவர் மென்னயத்துடன் அவர்களுக்குத் தன் கருத்தறிவித்தார். தம் புதல்வியரான இளவரசியருள் ஒருத்தியாகவே பாவித்துத் துயரார்ந்த அவ் அழகிளஞ்செல்வியை ஆட்கொள்வதாக அவர் சொல்லியனுப்பினார். அவள் இல்லத்தின் தனிமைத் துன்பம் தவிர்த்து அவளை இன்பத்தில் ஈடுபடுத்த அரண்மனை வாழ்வே மிகவும் உகந்தது என்று அவள் பாதுகாவலரும், அவள் உடன் பிறந்தானாகிய இளவரசன் ஹியோ புகியோவும் எண்ணினர். ஆகவே அவள் பேரவைக்கு இட்டுக் கொண்டு வரப்பட்டாள். அவளுக்கு புஜித்சுபோ மாளிகையின் அறைகள் ஒளித்து விடப்பட்டன. அம் மாளிகையின் பெயராலேயே இதுமுதல் அவள் புஜித்சுபோ இளவரசி என்று அழைக்கப்பட்டாள்.

தன் காதல் சீமாட்டியின் தோற்றத்துடன் அவள் தோற்றம் எவ்வளவு நெருங்கிய ஒப்புமை உடையதாய் இருந்தது என்பது கண்டு சக்கரவர்த்தி மலைப்படைந்தார். ஆயினும் மாண்ட சீமாட்டிக்கு இல்லாத குடிச்சிறப்பு இவ் இளவரசிக்கு அவளைவிட எத்தனையோ மடங்கு உயர்வுடையதாக அமைந்திருந்தது. இது கோக்கிடன் சீமாட்டியிடமிருந்தோ, பிறரிடமிருந்தோ ஏற்படக் கூடுமென்ற அவமதிப்பு அச்சத்தின் நிழலுக்கே இடமில்லாமல் செய்தது. அதுவே அவளிடம் எல்லாருக்கும் பெருமதிப்பை உண்டுபண்ணிற்று. அவளை மகிழ்விக்க, அவளுக்கு ஏற்றபடி நடக்க ஒவ்வொருவரும் போட்டியிட்டு முந்திக் கொள்ள முனைந்தனர். அவள் சிறுசிறு விருப்பங்களையும் நிறைவேற்ற, அவளுக்கு எத்தகைய சலுகையையும் தங்கு தடையின்றி தடையின்றி அளிக்க அளிக்க எவரும் தயங்கவில்லை. சக்கரவர்த்தியின் பாசத்தினால் மாண்ட சீமாட்டிக்கு ஏற்பட்ட இடர்கள் அதே பாசத்தை மேற்கொண்ட இளவரசிக்கு நேரவில்லை - அவள் உயர் குடிப்பிறப்பு அந்தப் பாசத்துக்கு எல்லார் ஒத்துழைப்பையுமே எளிதில் பெற்றுத் தருவதாயிருந்தது.

கு

சக்கரவர்த்தியின் உள்ளத்தில் பழைய காதலின் பிடி காலத்தின் போக்கால் ஒரு சிறிது கூடத் தளரவில்லை. ஆயினும் அவ்வப்போது மாண்ட சீமாட்டியிடம் சென்ற தம் நொந்த உள்ளத்தை அவர் அதே சீமாட்டியின் உயிர்ச் சாயலாய்