உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

35

அமைந்த இளவரசி மீது செல்லவிட்டு, சிறிது சிறிதாக ஆறுதலும் தேறுதலும் கண்டார். இடையிடையே நிகழ்ந்த இந்த ஒரு சிறு மாறுபாடன்றி, மொத்தத்தில் துயர் ஆழ்ந்த அவர் வாழ்வில் குறிப்பிடத்தகுந்த வேறு மாறுபாடு எதுவும் இல்லாமலே கழிந்தது.

மினமோட்டோ குழாத்தினரில் உறுப்பினனாகச் சேர்க்

கப்பட்டபின் இளவரசன் கெஞ்சி என்ற பெயரால் அழைக்கப் பட்டான். ஆயினும் கிட்டத்தட்ட எப்போதுமே அவன் சக்கரவர்த்தியுடனே அரண்மனையிலேயே தங்கி வாழ்ந்தான். பொதுவாக அரண்மனைப் பணி மாதருடனும் ஆடையணியரங்க மாதரசியருடனும் அவன் மிக எளிதாகப் பாச நேசத்துடனேயே பழகி வந்தான். இச்சமயம் புஜித்சுபோ இளவரசி அடிக்கடி சக்கரவர்த்தியின் தனியறைக்கு அழைக்கப்பட்டு, அவருடன் ஊடாடி வந்தாள். இவளிடமும் இளவரசன் எத்தகைய கூச்சமும் தடையும் இல்லாமலே பழகி வந்தான்.

இளவரசன் கெஞ்சியின் நன்மதிப்பையும் நேசத்தையும் பெறும் வகையில் அரண்மனை மாதர் எல்லாருமே தங்கு தடையற்ற இனிய போட்டியில் ஈடுபட்டிருந்தனர். அவனும் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு நற்பண்பு கண்டு பாராட்டி, அப்போட்டிகளிடையே ஒரு சிறிதும் மனக் கசப்புக்கு இடமில்லாமல் எல்லாருடைய நேசத்தையும் பொது உரிமையாகப் பெற்றிருந்தான். ஆயினும் அவர்கள் அனைவரும் குழந்தையிடம் பழகும் பெரியவர்களாகவே அவனிடம் நடந்து கொண்டனர். அவன் பாசம் இதற்கேற்ற தொலைவான பாசமாகவே இருந்தது. ஆனால், புஜித்சுபோ இளவரசி வகையில் அவன் தொடர்பு புதுவகையாய் அமைந்தது. அவள் இளமையும் அழகு நலமும் அவன் உள்ளத்தைத் துளைத்தன. தொடக்கத்தில் அவள் அவன் உணர்ச்சியில் பங்கு கொள்ளாமல் அவனிட மிருந்து ஒதுங்கி ஒளித்து நடமாட முயன்றதுண்டு. ஆனால், அவர்கள் அடிக்கடி நேருக்கு நேர் சந்திக்காமல் இருக்க முடியவில்லை. அவன் கவர்ச்சியில் ஈடுபடவும் அவள் சூழல்களே பெரிதும் உதவின.

இளவரசனுக்குத் தன் அன்னை பற்றிய நினைவு ஒரு சிறிதும் கிடையாது. ஆனால், அரண்மனை மாதரசி அவ்