உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




60

அப்பாத்துரையம் - 22

கடுமை காட்டாமலே அதை மெல்லக் கடிந்து ஒழித்து ஒடுக்கும் நயநாகரிகமுடையவளாகிறாள், இத்தகையவள் தொடக்கத்தில் தன் துணைவன் உள்ளத்தில் பெற்ற இடத்தைவிடப் பன்மடங்கு உறுதியான இடத்தை இறுதியில் பெற்று விடுகிறாள். ஏனெனில், பொறுப்பவர் பொறுதியின் ஆற்றல்போல அடங்கா உணர்ச்சிகளின் கொந்தளிப்பால் தீங்கு இழைப்பவர்களிடம் அவ்வுணர்ச்சிகளை அடக்கும் திறம் வேறில்லை என்பது உறுதி.

'அவள் பொறுதியும் பெரும்போக்கும் இவ்வாறு அவள் பாசத்திலிருந்தும் பண்பிலிருந்துமே எழுவதாகத் தெரிந்தாலும், அவற்றின் மூலமே அவள் உணர்ச்சிகள் போதிய ஆழமற்றவை என்பதும் தெளிவாகி விடுகின்றது. கரையோரமாகச் செல்லாப் படகு நீரோட்டத்தில் மிதந்து செல்லவே நேரிடும் என்பது பழமொழியன்றோ! இதில் உங்கள் கருத்தென்ன?' என்று அவன் கேட்டான்,

தோ நோ சூஜோ ஆமென்று குறிப்பது போலத் தலை யசைத்தான்.

அவன் பேசினான்,

'ஆதாரமில்லாமலே அன்புக்குரியவன் உள்ளத்தில் சந்தேக மெழுப்பிவிட்டவனுக்கு அதன் மூலமாகவே தளர்வுற்று வரும் காதலைப் புத்தெழுச்சியுடன் புதுப்பிக்க வகை ஏற்படும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், இந்த அக்கினிப் பரிட்சை மிக ஆபத்தானது, இத்தகைய சந்தர்ப்பங்களில் எழும் சீற்றம் ஆதார மற்றதாதலினாலே மௌனமாகப் பொறுத்திருந்து விட்டால் அது எளிதில் மாறிவிடும் என்றும் சிலர் பரிந்துரைக்கிறார்கள், ஆனால், எப்போதுமே நிலைமை இப்படி இராது என்பதை அனுபவமாக நான் கண்டுள்ளேன்.

‘மொத்தத்தில் பெண்டிரிடத்தில் எதிர்பார்க்கத்தக்க மிகச் சிறந்த பண்பு ஒன்றுதான், தன் பங்காக ஊழ்வழி வந்து சேர்வது எதுவானாலும், அதை அவன் பொறுமையுடனும் மென்னயத்துடனும் தாங்கிக் கொள்ளுவதே சிறந்தது.

இவ்வாறு கூறும்போது அவன் தன் தங்கை இளவரசி ஆயை நினைத்துக் கொண்டிருந்தான். அத்துடன் அவன் இது பற்றிய கெஞ்சியின் கருத்தையே ஆவலுடன் எதிர்பார்த்