உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

61

திருந்தான். ஆனால், இச் சமயம் கெஞ்சி முற்றிலும் துயிலில் ஆழ்ந்திருந்ததனால் அவனுக்கு ஏமாற்றமும்

இதில்

மனச்சலிப்புமே ஏற்பட்டன.

வ்வகை வாத எதிர் வாதங்களில் உமா நோ கமி திறமையுடையவனல்லன். தன் இறக்கைகளைக் குத்திக் குடையும். பறவை போல, அவன் தன்னைத் தானே குடைந்து கொண்டு நின்றான். ஆனால்,அவன் இன்னும் என்ன சொல்லப் போகிறான் என்று கேட்கவே தோநோ சூஜோ விரும்பினான். அவ்வகையில் அவனைத் தூண்டி ஊக்கவும் முற்பட்டான்.

உமா நோ கமி தொடர்ந்தான்,

'பெண்கள் செய்திகளெல்லாம் கலைத் தொழிலாளர் கைவினைப் பொருள்கள் போன்றவையே. தான் விரும்பும் எதையும் மரச் சிற்பி செய்துவிடக்கூடும், ஆயினும் அவன் கைவினைப் பொருள்கள் தற்காலிக விளையாட்டுப் பொருள்கள் மட்டுமே. அவை வேடிக்கைக்காகச் சிறிது நேரம் பார்க்கத் தக்கவையே யல்லாது நிலையான கலையமைதி அல்லது மெய்விதியடிப்படையாக அமைபவை அல்ல. காலப் போக்குக் கிசைய,செதுக்கும் கலைஞனும் தன் கைப் படிவத்தை, அன்றன்று உலவி மறையும் விருப்பு வெறுப்புப் பாங்குகளுக்கேற்பப் புதுப்புது வகையில் உருவாக்குகிறான். ஆனால், இதனின் வேறாக இன்னொருவகைக் கலைஞனும் உண்டு. அவன் தன் பணியில் இன்னும் ஆழ்ந்து செல்கிறான். மனிதர் வாழ்க்கையிலே பயன்படுத்தும் பொருள்களை எடுத்துக் கொண்டு அவற்றுக்கு அவன் மெய்யான அழகு வழங்குகிறான். கலை மரபு அவற்றுக்கு வகுத்துள்ள நிலையான உருவை அவற்றுக்கு அளிக்கிறான். வேலையற்ற நேரத்திற்குரிய களியாட்டப் பொருள்களிலிருந்து அழகு மெய்ப் பொருள்கள் செய்யும் இக்கலைஞன் முற்றிலும் வேறுபடுத்தி உணரத்தகுந்தவன் ஆவான்.

'வண்ண ஓவியர் கலைக்கூடத்தில் கை வண்ணத்திறம் கருவித் தேர்ந்தெடுக்கப்பட்ட நேர்த்தி மிக்க கலைஞர் பலர் இருத்தல் கூடும். அவர்களில் எவர் மிக்கவர், எவர் குறைந்தவர் என்று பிரித்தறிய முடியாத அளவுக்கு அவர்கள் அனைவருமே ஒத்த திறமையுடையவராகவும் இருத்தல் கூடாததன்று. ஆனால், அவர்கள் ஒவ்வொருவருமே ஆர்வப் பாராட்டும் கவர்ச்சியும்